தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாட்சி பாலியல் வழக்கில், அதிமுக நிர்வாகிகள் உள்பட 5 பேரை சி.பி.ஐ. கைது செய்தது. அதிமுக நிர்வாகி கைதால் இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. பொள்ளாட்சி பாலியல் வழக்கில் அதிமுகவினருக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிமுக அரசை விமர்சித்து வருகின்றன. 
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு ட்வீட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “தமிழகமோ, உத்தரப்பிரதேசமோ அல்லது வேறு எந்த மாநிலமாக இருந்தாலும் பெண் மீதான பாலியல் வன்கொடுமைகள் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பார்க்கப்பட வேண்டும்; குற்றவாளிகள் மீது எந்த கருணையும் காட்டாப்படாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையிலும் அல்லது உ.பி பாலியல் வன்கொடுமையிலும் ஒரு பெண்ணின் கண்ணியம் சூறையாடப்பட்டது வாழ்க்கைமீது பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.