Asianet News TamilAsianet News Tamil

கருத்துக்கணிப்பு முடிவுகள்...! அசால்ட் பண்ணிய திமுக ஐடிவிங்க்..! கலகலத்துப் போன அதிமுக ஐடி டீம்..!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மிகச் சிறப்பாக செயல்பட்டு வாக்காளர்களை அணுகியுள்ளது.

Poll Results ...! Assaulted DMK ITWing
Author
Tamil Nadu, First Published Apr 9, 2019, 9:36 AM IST

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மிகச் சிறப்பாக செயல்பட்டு வாக்காளர்களை அணுகியுள்ளது.

தேர்தல் என்றாலே கருத்துக் கணிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால் வெற்றி பெறப்போவது யார் என்று தெரிந்து அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் எந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கிறது என்பதைப் பார்த்து அந்தக் கட்சிக்கு வாக்களிக்கும் போக்கும் நிலவுகிறது. இதனால் தேர்தல் கருத்து கணிப்பு என்பது தேர்தல் முடிவுகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. Poll Results ...! Assaulted DMK ITWing

இதனை அறிந்து தங்களுக்கு சாதகமான தேர்தல் கருத்துக் கணிப்புகளை உடனுக்கு உடன் சமூக வலைதளங்கள் மூலமாக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. இது ஒருபுறம் இருக்க முன்னணி ஊடகங்கள் சிலவற்றில் கருத்துக்கணிப்புகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிட்டு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கு சாதகமாக கருத்துக்கணிப்புகளை உள்ளதாகவும் ஒரு பேச்சு உண்டு. Poll Results ...! Assaulted DMK ITWing

அதாவது முன்னணி ஊடகங்களில் தங்களுக்கு உள்ள தொடர்புகள் மூலமாக கருத்துக்கணிப்புகளில் தங்களது ஆதிக்கத்தை திமுக தொழில்நுட்பப் பிரிவு ஒதுக்கியுள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் கருத்துக்கணிப்பு விவகாரத்தில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு புதுமுகம் போன்று மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் மேலிடமும் கூட இந்தக் கருத்துக் கணிப்பு விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே தமிழக ஊடகங்கள் வெளியிட்ட பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுகவிற்கு சாதகமாகவும் அதிமுகவிற்கு பாதகமாகவும் உள்ளது. Poll Results ...! Assaulted DMK ITWing

ஜெயலலிதா இருந்தவரை தயக்கம் காரணமாகவோ அல்லது அச்சுறுத்தல் காரணமாகவே கருத்துக் கணிப்புகளை வெளிப்படையாக சில ஊடகங்கள் வெளியிடுவதில்லை. சில ஊடகங்கள் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களுடன் நெருக்கம் காரணமாக அதிமுகவிற்கு சாதகமான அம்சங்களை கருத்துக் கணிப்புகளில் சேர்த்துவிடுவதும் உண்டு. ஆனால் தற்போதைய அதிமுக தலைமையும் சரி தலைமைக்கு நெருக்கமானவர்களும் சரி ஊடகத்தில் யாருடன் நெருக்கம் காட்ட வேண்டும் என்பது தெரியாமல் பெரும்பாலும் ஊடக உரிமையாளர்களுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். Poll Results ...! Assaulted DMK ITWing

ஆனால் திமுக தரப்பு ஊடக உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களில் அதிகாரத்திலிருக்கும் செய்தியாளர்கள் பத்திரிகையாளர்களுடன் தங்கள் நெருக்கத்தை தொடர்கின்றனர். இப்படி பல்வேறு அம்சங்களில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சிறப்பாக செயல்பட்டு கருத்துக்கணிப்பு விவகாரத்தில் அக்கட்சிக்கு முன்னிலையில் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் கருத்துக்கணிப்பு விவகாரத்தில் அதிமுக தரப்பு கோட்டைவிட்டு விட்டதாகவே தெரிகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios