மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது: தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை செய்துள்ள அரசு அ.தி.மு.க. அரசு. ஆகவே வரும் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நடிகர்கள் ஆரம்பிக்கும் கட்சிகள் எல்லாம் நிலைத்து நிற்காது.

 கமலஹாசன்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து கொண்டிருக்கிறார். மூன்று நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார், அதன் பிறகு பிக்பாஸ் சூட்டிங்கிற்கு சென்றுவிடுவார். அடுத்து அவரது படம் தயாராக இருக்கிறது. அந்த படத்தின் சூட்டிங்கிற்கு சென்று விடுவார். ஆனால் அரசியலுக்கு அரசியலில்  மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற எங்களை போன்ற அரசியல்வாதிகள் இருக்கிறோம்.ஆகவே கமலஹாசன் போன்றவர்களுக்கு அரசியல் ஒத்து வராது. 

நான் நாட்டை திருத்த போறேன் என கமல் சொல்ல முடியாது. ஏன் எனில் அவர் உலக நாயகன், அவரால் நடிக்க மட்டுமே முடியும் என்றார். முதல்வர் வேட்பாளர்  குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட கூட்டத்திலேயே அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பா.ஜ.க. பாறாங்கல்லை போல ஆதரவு கொடுக்கும் என கூறி விட்டு திமுகவை கிழி கிழி என கிழித்தார், பிரதமர், அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.கவை சேர்ந்த அனைவரின் ஆதரவையும் பெற்று அ.தி.மு.க.ஆட்சி அமைக்கும். 

அ.தி.மு.க - பா.ஜ.க., கூட்டணி நிலைத்து நிற்கும் அரசியல் காரணங்களுக்காக முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை பேச்சு எழுந்து வருகிறது. பா.ஜ.க. அ.தி.மு.க.விற்கு என்றைக்கும் நண்பேண்டா என டயலாக் பேசினார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் வேலைகள் நடைபெறுவதால் மழை பெய்யும் நாட்களில் மக்கள் அவதி படுகிறார்கள் என்ற கேள்விக்கு, ஒரு நன்மையான செயல் இருக்கும்போது ஒரு தீமையான செயல் இருக்கதான் செய்யும். இன்னும் ஓரிரு மாதங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முடிந்து விடும் அதன் பிறகு  மதுரை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. இவ்வாறு அவர் ஊறினார்.