கடந்த ஆறு மாதங்களாக சோர்வடைந்து இருந்த மக்கள் மன்ற நிர்வாகிகள் கடந்த 3 நாட்களாக திடீரென சுறுசுறுப்பாகி உள்ளனர். 

சட்ட மன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என தடாலடியாக அறிவித்துவிட்டு மும்பை சென்று விட்டார் ரஜினி. வழக்கம்போல் இது ரஜினியின் பாசாங்குதான் என்று எதிர்க்கட்சிகள் எண்ணிக் கொண்டிருந்தன. ஆனால் மும்பை செல்வதற்கு சில நாட்களுக்கு முன்னரே மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து ரஜினி தனது திட்டத்தை தெளிவாக கூறி விட்டதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மக்கள் மன்ற செயல்பாடுகளில் ஆக்டிவாக இருப்பவர்களின் விவரங்களை ரஜினி நேரடியாகக் கேட்டு பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மன்ற செயல்பாடுகள் மீண்டும் சுறுசுறுப்பாகி உள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளில் ஆக்டிவாக இல்லாதவர்களின் பதவிகளை பறித்துவிட்டு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் மக்கள் மன்ற நிர்வாகிகளில் வேறு கட்சியில் இருந்து வந்தவர்களை அடையாளம் காண்பது மற்றும் அவர்களின் தேர்தல் அனுபவம் மிக்கவர்களுக்கு பதவிகளை கொடுப்பது என கடந்த 3 நாட்களாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள். இதன் மூலம் ரஜினி வேட்பாளர் தேர்வுக்கு தயாராகி விட்டதாக அவருக்கு கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அரசியல் தொடர்பான ரஜினியின் முக்கிய அறிவிப்பு இருக்கும் என்று வழக்கம்போல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.முடிவுகளுக்குப் பிறகு இரண்டாம் கட்ட மற்றும் முதல்கட்ட நிர்வாகிகள் கூட வேறு கட்சிகளுக்கு செல்வார்கள் என்று திவாகரன் தரப்பு கூறிக் கொண்டிருக்கிறது.