Asianet News TamilAsianet News Tamil

பணத்தை தண்ணீராய் செலவு செய்த திமுக… கஞ்சத்தனம் செய்த அதிமுக… கணக்கே காட்டாத பாஜக.!

5 மாநில சட்டபை தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் செய்த செலவுகளின் விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

political parties submit election ledger to election commission of india
Author
Delhi, First Published Oct 4, 2021, 7:28 AM IST

5 மாநில சட்டபை தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் செய்த செலவுகளின் விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா,  புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் செலவு கணக்கை தாக்கல் சமர்ப்பித்துள்ளன.

political parties submit election ledger to election commission of india

தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றி உள்ள தி.மு.க. தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்திற்காக  ரூ.114 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரத்து 525 செலவிட்டதாக தனது கணக்கில் தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்து ஆட்சியை பறிகொடுத்த  அ.தி.மு.க.,  ரூ.57 கோடியே 33 லட்சத்து 86 ஆயிரத்து 773 செலவிட்டதாக தெரிவித்துள்ளது.

political parties submit election ledger to election commission of india

தேசிய கட்சியான காங்கிரஸ்,  5 மாநில தேர்தல்களுக்கும் ரூ.84 கோடியே 93 லட்சம் செலவிட்டதாக கூறியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.13 கோடியே 19 லட்சம் செலவிட்டதாக கூறியுள்ளது. மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், ரூ.154 கோடியே 28 லட்சம் செலவிட்டதாக கூறியுள்ளது. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தேர்தல் செலவுகள் எதுவும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெறவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios