யாரோ சொல்வதைக் கேட்டு பேசுவதை நடிகர் ரஜினிகாந்த் நிறுத்திக்கொள்ள வேண்டும் என  நாஞ்சில் சம்பத் அறிவுரை  கூறியுள்ளார் . அரசியலில் குதிக்கப் போவதாக கூறிவரும் நடிகர் ரஜினிகாந்த் அதற்கான வெள்ளோட்டத்தில்  அரசியல் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் .  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் , பெரியார் ராமர் குறித்த விவகாரம்,  முரசொலி துக்ளக் ஒப்பீடு என கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பிவருகிறார்.  இதில் ரஜினி கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார் . 

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனத்தை  முன்வைத்து வருகின்றனர் .  உலகில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மேட்டுப்பாளையம் ஜின்னா திடலில் நேற்று இரவு சமய நல்லிணக்கப் பொதுக்கூட்டம் நடந்தது . அதில் நாஞ்சில்சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் ,  அப்போது பேசிய அவர் .  குடியுரிமைச் சட்டம் திருத்த  சட்டத்தால் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இந்தியர்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   இச்சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னர் சட்ட வல்லுநர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்  எதிர்க்கட்சியினர் என பலருடன் கலந்துரையாடல் நடத்தி இருக்கவேண்டும் . இச்சட்டத்தை

 

ஏற்க மாட்டோம் என பாஜக கூட்டணியில் உள்ள கட்சியினரே அறிவித்துள்ளனர் .  அதேபோல் சுமார் 11 மாநில முதல்-மந்திரி களும் தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என கூறியுள்ளது பாஜகவுக்கு வெட்கக்கேடானது .  நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை சட்டத்தால்  எந்த பாதிப்பு இல்லை என்கிறார் யாரோ சொல்வதைக் கேட்டு நடிகர் ரஜினிகாந்த் பேசுவதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும் பெரியார் பற்றி தெரியப்படுத்தவும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார வீழ்ச்சியூ  திசை திருப்பாவே ரஜினி  தேவைப்படுகிறார் இருக்கிறார் என .