Police will not arrest s.ve sekar
பா.ஜ.க கட்சியை சேர்ந்த எஸ்.வி.சேகர் தன் நண்பர் திருமலை.சா என்பவர் போட்டிருந்த முகநூல் பதிவை தன் முகநூல் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அந்த பதிவானது பத்திரிகை துறையில் வேலைபார்க்கும் பெண்களை அவமதிக்கும் வகையில் இருந்த்து, இதனை கண்டித்து பல்வேறு பெண்கள் அமைப்பும் பத்திரிக்கையாளர் சங்கமும் காவல் துறையில் புகார் அளித்திருந்தனர், மேலும் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மனு தரக்கூடாதென நீதிமன்றத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டிருந்தன.
பத்திரிக்கையாளர்கள் பலரும் எஸ்.வீ. சேகருக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர்

இந்நிலையில் எஸ்.வீ.சேகர் தனக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு போட்டிருந்தார், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட்து. மீண்டும் கோடைக்கால சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆளும் மத்திய- மாநில அரசுக்கு எதிராக பதிவு போட்டவர்களையும் மக்கள் போராட்ட்த்தில் ஈடுபட்டவர்களையும் இரவோடு இரவாக கைது செய்துவரும் காவல் துறை பத்திரிகையாளர்களை மோசமாக விமர்சித்து பதிவு போட்ட எஸ்.வீ.சேகரை முன் ஜாமீன் பெற முடியாத வழக்கு பிரிவின் கீழ் புகார் செய்தும் இன்று வரை காவல்துறை கைது செய்யவில்லை.

எஸ்.வீ. சேகரை கைது செய்யாததை ஒட்டி காவல்துறைக்கு நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தது.
மாநில அரசின் தலைமை செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் எஸ்.வீ. சேகரின் தம்பி மனைவி என்பதாலும் அவர் மத்திய தலைமை செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது என பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எஸ்.வீ. சேகரின் நண்பரான திருமலை.சா என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் இவரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பே ஏரியா பெண்கள் அமைப்பு (Bay Women Organisation) கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளது.
குற்றம் செய்தவர்களை கைது செய்யாமல் அவர்கள் வீட்டுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது காவல்துறை.
