தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆறுதல் கூறச்சென்ற ரஜினியை நீங்கள் யார் என கிண்டலடித்த வாலிபர் பைக் திருட்டு வழக்கில் கைதாகி உள்ளார்.  

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆறுதல் கூறச்சென்ற ரஜினியை நீங்கள் யார் என கிண்டலடித்த வாலிபர் பைக் திருட்டு வழக்கில் கைதாகி உள்ளார். 

துாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார். இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனது. வடபாகம் போலீசார் விசாரணையில், துாத்துக்குடி, பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ், கால்டுவெல் காலனி மணி, ஆசிரியர் காலனி சரவணன், ஆகியோர் பைக்கை திருடியது தெரிந்தது. அவர்களை கைது செய்து பைக் கை பறிமுதல் செய்தனர். கைதான சந்தோஷ், துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு தாக்குதலில் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். காயமுற்றவர் களிடம் ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினியிடம், 'நீங்கள் யார்' என கிண்டலாக கேட்டார்.

இந்நிலையில், .#நான்தாப்பா_பைக்_திருடன் என்கிற ஹெஷ்டேக்கை ட்விட்டரில் உருவாக்கி ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். அதில், ரஜினிக்கு ஆதரவாக பதிவுகளை பரப்பி வருகின்றனர். 

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…