கடந்த ஒரு வாரமாக போலீசை வாட்ஸ் அப்பில் மிரட்டிக் கொண்டிருந்த ரௌடி புல்லட் நாகராஜனுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலமுருகள் அடைக்கலம் கொடுத்தது அம்பலமாகியுள்ளது. கூடுதல் எஸ்.பி. சுருளிராஜன் தலைமையில் நடந்த விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன் என்ற புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான புல்லட் நாகராஜன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் தேனி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீசாரை விமர்சித்து வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போன்று தென்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதன கலாவையும் இவர் மிரட்டியுள்ளார்.

அந்த ஆடியோவில் நான்சட்டத்தைவிரல்நுனியில்வைத்துள்ளேன். என்வீட்டுக்குசென்றுசோதனைநடத்துவதாகஇருந்தால், கோர்ட்டில்உத்தரவுவாங்காமல்எதுவும்செய்தீர்கள்என்றால்அம்புட்டுபேரும்ஜெயிலுக்குபோவதுஉறுதி. குணா, நீஒருமுட்டாள். உன்னையார்சி.பி.சி.ஐ.டி.யில்சேர்த்தது. என்னைப்பொறுத்தவரைநீஒருமுட்டாள்.

அண்ணன்இப்போஎங்கேயோபோயிட்டேன். டாப்லெவலுக்கு. என்முடியைகூடஉன்னால்கண்டுபிடிக்கமுடியாது. நீஉலகம்முழுவதும்தேடினாலும்என்னைதொடமுடியாது. நானாகவிரும்பினால்தான்உன்முன்னால்வருவேன்.
நான்சட்டம்படித்தவன். நான்எப்படிகொலைசெய்வேன். தண்டிப்பேன்என்றுசொல்லலாம். அதுகோர்ட்டில்வைத்துதண்டிக்கலாம். இந்தநாகராஜனுக்குஎன்றுஒருகோர்ட்டுஇருக்கிறதுஎன்றுசொல்லிஇருக்கிறேன். நான்பிறந்தமண்ணைவிட்டுஓடிப்போய்விட்டேன்என்றுதப்புகணக்குபோட்டுவிடாதீர்கள். என்னைபாதுகாத்துக்கொண்டால்தானேஉங்கள்எல்லாருக்கும்ஆப்புவைக்கமுடியும் என கண்டபடி பேசியிருந்தார்..

இதற்கிடையே, உலகில் எங்கு தேடினாலும் என்னை கண்டுபிடிக்க முடியாது என்று சவால்விட்டு வந்த புல்லட் நாகராஜனை இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம் சிஎஸ்ஐ சர்ச் அருகே சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள நாகராஜன் தென்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது வீட்டை சோதனையிட்டதில் பயங்கர ஆயுதங்கள், கள்ள ரூபாய் நோட்டுக்கள் என பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன..

இந்நிலையில் புல்லட் நாகராஜனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெரியகுளம் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலமுருகள் அடைக்கலம் கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
