Police protection tightened for Rajinikanths poes garden house
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதியுதவியும் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். ஆட்சியர் அலுவலகம், போலீஸ் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது எல்லாம். சமூக விரோதிகள், விஷக் கிருமிகள். இந்த வேலையை செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துள்ளனர் என அவர் கூறியிருந்தார்.

தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர் என்ற ரஜினியின் இந்த கருத்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தை கொச்சப்படுத்தியதாக பலரும் குற்றம்சாட்டி அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்த சென்னை விமானநிலையம் வந்தடைந்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது.. போராட்டத்தை சமூகவிரோதிகள் தான் உள்ளே புகுந்து கெடுத்தனர் எனக்கு அது தெரியும். ஜல்லிக்கட்டில் கடைசி நேரத்தில் எப்படி கெடுத்தார்களோ. அதேபோல் இப்போதும் செய்துள்ளார்கள். இந்த பிரச்சனை தொடங்கியதே போலீசை அடித்த பின்னர் தான் போலிஸ் சுட்டார்கள். சமூகவிரோதிகள் போலீசை தாக்கினர். அப்போது தான் பிரச்சனை தொடங்கியது. காவல்துறையை யூனிபார்முடன் யார் அடித்தாலும் எப்போதும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். போராட்டம், போராட்டம், போராட்டம்ன்னு சொல்லி போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என ஆவேசமாக பேசிவிட்டு நடை கட்டினார்.

இதனை அடுத்து, ரஜினியின் இந்த கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்ல, பல்வேறு அமைப்புகளும் ரஜினிக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த நேரத்தில் ஆளும் கட்சியும், தமிழக பாஜக தலைவர்களும் ரஜினி பேசியது சரிதான் என அவரின் கருத்துக்கு வரவேற்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் கருத்துக்கு வரவேற்ப்பு தெரிவிக்க காரணம் என்ன தெரியுமா? அவர் தூத்துக்குடியில் பேட்டியளிக்கும்போது, போராட்டத்தை திசைதிருப்பியது விஷமிகள் தான், அந்த விஷயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். அவர் சமூக விரோதிகளை அடக்கி வைத்திருந்தார். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையை பாராட்டி பேசியினார். அதுமட்டுமல்ல, தூத்துக்குடியில் அசம்பாவிதம் நடந்தததற்கு உளவுத்துறை தான் பொறுப்பு. இது உளவுத்துறையின் தவறே. எல்லாத்திற்கும் ராஜினாமா கேட்பது நியாயம் ஆகாது. எந்த பிரச்சினைக்கும் ராஜினாமா செய்வது என்பது தீர்வாகாது என எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவான கருத்தை கூறியதால், அதிமுகவினர் டபுள் ஹேப்பியில் இருக்குரார்களாம்.

ரஜினியின் சர்ச்சையை பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு முதல்வராக இருந்த சமயத்தில் அளிக்கப்பட்ட பாதுகாப்பை விட கூடுதலானது என்பது குரிப்பிடத்காக்கது.
