Police opened fire is brutally - SitaramYechury
தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மார்க்சிஸ் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த கலவரத்தின்போது 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். கலவரத்தின்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த
நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, தூத்துக்குடி சென்று, அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருபவர்களைச் சந்தித்தார்.
இதன் பின்னர், சீதாராம் யெச்சூரி, செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். தூத்துக்குடி கலவரத்தின்போது, முன்கூட்டியே திட்டமிட்டு போலீசார் சுட்டதாக மக்கள் தங்களிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்கள் மார்பில் சுடப்பட்டு இறந்துள்ளனர். போலீஸ் கொடூரமாக சுட்டதாக யெச்சூரி குற்றம் சாட்டினார். கலவரத்தின்போது ஒரு சிலரே காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக தமிழக அரசு கூறுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில், வேதாந்தா நிறுவனத்தின் தாமிர தொழிற்சாலைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தூத்துக்குடியில் அந்த ஆலை அமைக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு, ஸ்டெர்லைட் ஆலை கேடு விளைவிக்கும் என்பது முன்பே தெரியும். ஸ்டெர்லைட் ஆலையில் ஆண்டுக்கு 70 ஆயிரம் டன் தாமிரம் உற்பத்தி செய்யவே அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் ஆண்டு உற்பத்தித்திரன் 3 லட்சம் டன்னாக
அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றார்
பொதுமக்கள் போராட்டம் நடத்திய 100-வது நாள் அன்று ஆட்சியரோ, எஸ்பியோ ஊரில் இல்லை. அப்படியெனில், துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்தது யார்?
என்றும் ஆட்சியர் அதிகாரத்தை எடுத்துக் கொண்டது யார்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி கலவரம் குறித்து பதவியில் உள்ள நீதிபதி
மூலமாகத்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று யெச்சூரி கூறினார்.
முன்னதாக பேசிய தமிழக மார்க்சிஸ் கட்சியின் தலைவர் பாலகிருஷ்ணன், தூத்துக்குடி கலவரத்தின்போது 13 பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக ஒரு காவல் அதிகாரி மீது நடவடிக்கை இல்லை என்று குற்றம் சுமத்தினார்.
