புதுக்கோட்டை மாவட்டம், திருமணம் அருகே மெய்யாபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் இந்த ஊர்வலம் சென்றது. அப்போது, குறிப்பிட்ட பகதியில் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை  விதித்திருப்பதாக போலீசார் கூறினர். அதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அதன் பின்னர் தடையை மீறி ஊர்வலமும் நடைபெற்றது. ஹெச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வெகுவாக பரவி வருகிறது. ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தையும், போலீசாரையும் கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜாமீது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து வட்ட 

வல்லுனர்களின் கருத்தை அரசு கேட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். ஹெச்.ராஜாவுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் முன்பு நாளை வழக்கறிஞர் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர். ஹெச்.ராஜாவின் பேச்சால் தமிழக போலீசார் கொதித்துப் போயுள்ளனர். 

இந்த நிலையில், அம்பேத்கர் கே., என்ற காவல்துறை அதிகாரி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், குஜராத் காவல் ஆய்வாளர் வாட்அப் மேசேஜ் என்று குறிப்பிட்டு கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.  அதில், சரிய்யா உன் பேச்சுக்கே வர்ரோம் எல்லாமே கரெப்ட் போலிஸ்தான் என்ன டேஷ்க்கு துப்பாக்கி ஏந்திய போலிஸ் கேட்குற அவன் தான் கரெப்ட் ஆச்சே....
#எங்க கரெப்ட் போலிஸ் பாதுகாப்பு வேணாம்னு தனியா போய் பாரேன்.. போலிஸை தரக்குறைவா பேசிட்டு  துப்பாக்கி ஏந்திய போலிஸ் வேணும்னு கேட்கிற அனைத்து கரெப்ட் ஆளுங்களுக்குமான பதிவு இது." என்று பதிவிடப்பட்டுள்ளது.

மற்றொரு பதிவில் அம்பேத்கர், "ஒரு துப்பாக்கி... ஒரு போலிஸ்... ஆயிரம் போலிஸுக்கு சமம்னு நினைச்சு பக்கத்தில் உன் பாதுகாப்புக்கு நிற்கிறான் பார்... நேர்மைன்னா என்ன? கடைமைன்னா என்ன? சகிப்பு தன்மைன்னா என்னன்னு அவன் பாடம் எடுத்துக்கிட்டு இருக்கான்யா உனக்கு. இதெல்லாம் புரிஞ்சிருந்தா நீ ஏன் இப்படி பேசப்போற ஷின்சான்" என்று பதிவிடப்பட்டுள்ளது.