நான் என் வீட்டிற்கு போறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை..? காவல் நிலையத்தில் வசந்தகுமார் எம்.பி சரமாரி கேள்வி..!

தேர்தல் விதிமீறல் தொடர்பாக காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த ஒரு தருணத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்கு வசந்தகுமார் சென்றதாக அவர் மீது சர்ச்சை எழுந்துள்ளது.

நாங்குநேரி தொகுதியில் வாக்கு உரிமை இல்லாத அரசியல் தலைவர் எதற்காக நாங்குநேரி தொகுதிக்கு வரவேண்டும் என்றும் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என கருதிய போலீசார் இரண்டுமுறை வசந்தகுமாரி தடுத்து நிறுத்தி நாங்குநேரி தொகுதிக்கு செல்லக்கூடாது 
என தெரிவித்துள்ளனர்

பின்னர் களக்காடு என்ற பகுதியை நோக்கி சென்ற வசந்தகுமாரின் காரை மறித்த போலீசார் அவரை நாங்குநேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வசந்தகுமார் பாளையங்கோட்டையில் உள்ள எனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது..வழி மறித்து விசாரணை  செய்கின்றனர். 

நான் ஏதோ கொலை செய்துவிட்டது போல போலீசார் என்னை அழைத்து வந்துள்ளனர். என் வீட்டிற்கு செல்ல எனக்கு உரிமை இல்லையா ? நான் எந்த வழியில் சென்றால் அவர்களுக்கு என்ன? நான் எங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டிய வழி இது தான்... எதற்காக வாகனத்தை வழிமறித்து ஒரு நானடாளுமன்ற உறுப்பினரைஇப்போது விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர் என தெரியவில்லை..என தெரிவித்து உள்ளார்.

பின்னர் இது குறித்து விளக்கமளித்த போலீசார், காவல் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு வசந்தகுமாரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் விதிகளை மீறி இவர் செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பிரச்சினைக்கு பின் நாங்குநேரி தொகுதி வேட்பாளரான ரூபி மனோகரன் வசந்தகுமாரை சந்தித்து பிரச்சினை குறித்து பேசி உள்ளனர். நாங்குனேரி, பாளையங்கோட்டை, நாகர்கோவில்,கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் அதிக செல்வாக்கு மிக்கவரான  வசந்தகுமாரை போலீசார் திடீரென வழிமறித்து விசாரணை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல் அளித்த புகாரின் அடிப்படையில் அனாவசியமாக கூட்டம், கூடுதல் சம்பந்தம் இல்லாத நபர் தொகுதிகளில் நுழைவு என புகாரின் அடிப்படையில் 171எச்,130,143 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த ஒரு நிலையில்  திமுகவினருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே  வாக்குவாதமும் ஏற்பட்டது.