சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு வந்ததை அடுத்து போலீசார் அதிரடியாக நுழைந்துள்ளனர். 2000 போலீசார் , 500 அதிரடிப்படையினர் அதிரடியாக கூவத்தூர் ரிசார்டில் நுழைந்ததை அடுத்து அங்கிருந்த குண்டர்கள் காணாமல் போயினர்.

கூவத்தூர் ரிசார்டில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்ட அன்று செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டது. அவர்கள் கேமராக்கள் பறிக்கப்பட்டது. வாகனங்கள் தாக்கப்பட்டது.

உள்ளூர் போலீசார் கண்டுகொள்ளாத நிலையில் செய்தியாளர்கள் குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். மிரட்டப்பட்டனர். ரிசார்டுக்கு செல்லும் வழியெங்கும் இருந்த குண்டர்கள் ஆதிக்கம் இருந்தது. அப்பகுதி பொதுமக்கள் , பெண்கள் , மாணவ மாணவியர் அச்சுறுத்தப்பட்டனர். 

ஒரு எம்.எல்.ஏக்கு 4 குண்டர்கள் பாதுகாப்புக்கு இருக்கிறார்கள் என்று தப்பி வந்த எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர். மொத்தம் 1000 பேர் வரை குண்டர்கள் இருப்பார்கள் என்று தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் முத்தரசியிடம் பத்திரிக்கையாளர்கள் முறையிட்டபோது உங்களை யாருங்க அங்க போக சொன்னது என்று ஆணவமாக பதிலளித்தார்.

மேலும் நீதிமன்றத்தில் எந்த எம்.எல்.ஏவும் மிரட்டப்படவில்லை என்று அறிக்கை கொடுத்தார். ஆனால் அன்று இரவே மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் தப்பி வந்தார். 

இந்நிலையில் இன்று காலை ஐஜிக்கள் வரதராஜ் , பெரியய்யா , செந்தாமரைக்கண்ணன் தலைமையில் 3000 போலீசார் , அதிரடி படையினர் ரிசார்டுக்குள் நுழைந்தனர். இதையடுத்து அங்கிருந்த குண்டர்கள் படகில் ஏறி தப்பி சென்றனர். 

இதையடுத்து சசிகலா தலைமையில் நடக்கும் கூட்டம் முடிவதற்காக போலீசார் காத்துகொண்டிருக்கின்றனர். முடிந்தவுடன் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூரு அழைத்து செல்ல்ப்படுவார்.