Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவினருக்கு காவல்துறை நெருக்கடி… எஸ்.பி.வேலுமணி திடுக் குற்றச்சாட்டு..!

பொதுமக்களுக்கு மாஸ்க் கொடுக்க சென்றால் அதிமுகவினர் மீது வழக்கு பதிந்து விடுவோம் என காவல்துறையினர் எச்சரிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.

Police crisis SP Velumani accuses AIADMK
Author
Tamil Nadu, First Published May 27, 2021, 5:14 PM IST

கொரோனா வைரஸ் பாதிப்பால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு தன்னார்வலர்களும் தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவி புரிந்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் அவரவர் பகுதி மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். இந்த நிலையில், மக்கள் நலத்திட்ட உதவிகளை செய்ய முன்வரும் அதிமுகவினரை காவல்துறையினர் தடுப்பதாக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.Police crisis SP Velumani accuses AIADMK

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’கோவையில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மின்மயானத்தில் எரிக்க இடமில்லாமல் இருப்பதை சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதியை அதிகரிக்கவும் கூடுதல் பரிசோதனை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.Police crisis SP Velumani accuses AIADMK

அதிமுகவினர் மக்களுக்கு உதவ காவல் துறையினர் அனுமதிப்பதில்லை. பொதுமக்களுக்கு மாஸ்க் கொடுக்க சென்றால் அதிமுகவினர் மீது வழக்கு பதிந்து விடுவோம் என காவல்துறையினர் எச்சரிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios