உதவி கேட்டு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹைதராபாத் பாஜக தலைவரும் வழக்கறிஞருமான எம் ரகுநந்தன் ராவ் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .  இது பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ,   அதைத் தடுக்க அரசும் காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும் அக்குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை  சாதாரண நிலையில் இருப்பவர்கள் தொடங்கி அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் வரை பெண்களை போகப் பொருளாக பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. 

   

இந்நிலையில் அரசியல்வாதி ஒருவர் உதவிக்காக தன்னை நாடி வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் சைபராபாத்  காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ள இளம்பெண்  ஒருவர்  , பாஜக தலைவர் திட்டமிட்டு தன்னை  பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார் .   இது குறித்து தெரிவித்துள்ள அந்த பெண் ,   கடந்த 2003 ஆம் ஆண்டு கணவருடன் கருத்து வேறுபாடுகாரணமாக பிரிந்த தான், அவர்மீது   துன்புறுத்தல் வழக்கையும் ,   2007 ஆம் ஆண்டில் பராமரிப்பு வழக்கையும் பாஜக தலைவரும் வழக்கறிஞருமான ரகுநந்தன் ராவ்   மூலம் தாக்கல் செய்ததாக தெரிவித்தார் .   அப்போது ரகுநந்தனை அடிக்கடி சந்திக்க நேர்ந்தபோது ,   அவர்  தன்னை  பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார் .  வழக்கு விஷயமாக அவரை அவரது அலுவலகத்தில் அடிக்கடி சந்தித்தபோது அவர் தனக்கு மயக்க மருந்து கலந்த காபியை குடிக்க கொடுத்து  தன்னை மயக்கம் அடையவைத்தார் எனவும் ,  

பின்னர்  தன் ஆடைகளை கழற்றி  தன்னை நிர்வாணப்படுத்தி புகைப்படம்  எடுத்த ரகுநந்தன்  தன்னுடன் உடலுறவில் ஈடுபட்டு தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டார் எனவும் அதில்  குற்றம்சாட்டியுள்ளார் .   அதுமட்டுமல்லாமல் தன் நிர்வாண  புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என பலமுறை தம்மை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததாகவும் ரகுநந்தன் ராவ் மீது அந்தப் பெண் சைபராபாத் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார் .  அந்தப் புகாரின் அடிப்படையில் பாலியல் பலாத்காரம் மற்றும் அச்சுறுத்தல் வழக்குகளை போலீசார் ரகுநந்தன் ராவ்  மீது பதிவு செய்துள்ளனர் . இந்நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.