Pokland machine work near Anna Memorial
அண்ணா சமாதி அருகே ஜேசிபி எனப்படும் பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் வேலை வேகமாக நடந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள முன்னால் முதலமைச்சர் சி ஏன் அண்ணாதுரை சமாதி அருகே, ஒரு பொக்லைன் எந்திரம், இரண்டு மாநகராட்சி லாரிகளும் சுத்தம் செய்யும் பனியில் ஈடுபட்டு வருவதால் திமுக தொண்டர்களுக்கிடையே பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, இன்று காலை முதலே சென்னை ராஜாஜி அரங்கம் சுத்தம் செய்யப்படும் பணிகளும், விளக்குகள் பொருத்தப்படும் பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

போதாக் குறைக்கு, மத்தியிலிருந்து முக்கிய தலைவர்கள் வருவதால், சென்னையிலுள்ள முக்கிய சாலைகளில் பாதுகாப்பிற்க்கு வரும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அதேமட்டுமல்ல, திமுக தலைவரை பார்ப்பதற்காக பிரதமர் மோடி எந்த நேரமும் வரலாம் என்பதால் இந்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது.

இது ஒரு புறமிருக்க, மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதி அருகே ஒரு பொக்லைன் எந்திரமும், சில மாநகராட்சி வாகனமும் சுத்தம் செய்யும் வேலை வேகமாக நடந்து வருவதால் திமுக தொண்டர்களிடையே குழப்பமும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
குறிப்பு; இந்த பணிகள் குறித்து விசாரிக்கையில், கடந்த சில நாட்களாகவே பராமரிப்புப் பணிகள் நடந்து வருவதாகவே தெரிவித்தனர்.
