ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் அமைந்துள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் இருந்து எரிவாயு கசிந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர், சுமார் 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாயு காற்றில் பரவியதால் சாலைகளில் நடந்து சென்ற பொதுமக்கள் கண்களில் எரியும் உணர்வு மற்றும் சுவாசக் கோளாறு இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

T.Baamurukan

Scroll to load tweet…

இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சென்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்தார். பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் திடீர்திடீரென மயங்கி விழும் காட்சிகள் பார்ப்பவர்களின் நெஞ்சங்களை பதற வைத்துக்கொண்டிருக்கிறது.