ஆர்.எஸ்.எஸ் கருத்து ஆபத்தானதா? அரவணைப்பா? என்கிற தலைப்பில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது நெறியாளர் பாஜக நிர்வாகி கே.டி.ராகவனிடம் கதாகால்ஷேபம் செய்யுங்கள் எனக் கூறினார். இதற்கு கேடி ராகவனிடம் வருத்தமும், மன்னிப்பும் கேட்டார். 

இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘’News 18 நெறியாளர் என்கிற போர்வையில் இருந்து கொண்டு திரு.கே.டி.ராகவன் அவர்களிடம் நீங்கள் கதாகாலக்ஷேபம் செய்யுங்கள் என்று செந்தில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இம்மாதிரி அநாகரிகமான ஒரு நபரை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்’’என கொதித்துள்ளார். 

 

இந்நிலையில் நெட்டிசன்கள்,  கதாகாலக்ஷேபம் என்பது அவ்வளவு பெரிய கெட்ட வார்த்தையா? என கேட்டு வருகின்றனர்.  கதாகாலட்சேபம் என்ற சொல் அநாகரீகமானதுன்னு சொல்ல வர்றீங்க,. கதாகாலட்சேபம் செய்பவர்கள் எல்லாரும் பிராமணர்கள், அவர்களையும் அநாகரீகமானவர்கள்னு சொல்றீங்கன்னு எடுத்துக்கலாமா? எனவும் கேட்டு வருகின்றனர்.