Poes Garden tested not related to CM

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தில் நடந்த வருமான வரிசோதனையில் முதல்வருக்கோ, துணை முதல்வருக்கோ எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், இது வழக்கமான நடைமுறைதான் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சசிகலா, டிடிவி தினகரன் தொடர்புடையவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை கடந்த 9 ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர். 1800 அதிகாரிகளுக்கும் மேற்பட்டோர், நாடு முழுவதும் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 9 ஆம் தேதி தொடங்கிய சோதனை தொடர்ந்து 5 நாட்களாக நடைபெற்று வந்து. 

இந்த நிலையில் சென்னையில் ஜெயலலிதா வாழ்ந்த போயல் கார்டனில் உள்ள இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

போயஸ் இல்லத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் சோதனைக்கு டிடிவி தினகரன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், போயஸ் கார்டனில் சோதனையிடப்பட்டது வழக்கமான நடைமுறை என்று கூறியுள்ளார்.

பழனியில் வரதமாநதி அணையில் இருந்து பாசனத்துக்காக அமைச்சர் சீனிவாசன் தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை நடத்தி இருப்பது வழக்கமான நடைமுறையே என்றார்.

வருமான வரித்துறையினர் அவர்களது கடமையைத்தான் செய்தனர். இந்த விஷயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கோ, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.