Asianet News TamilAsianet News Tamil

இலங்கைக்கு துணையாக பாகிஸ்தான் வந்தால்...!! ஈழத்தமிழர்களுக்காக இந்தியா வர வேண்டும். கர்ஜித்த அன்புமணி...!!

அவர்களுக்கு இன்னும்  நிலம் ஒப்படைக்கப்படவில்லை .  இந்நிலையில் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்ற பிறகு அங்கு மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன . 
 

pmk youth wing leader and member of Parliament anbumani ramadoss asking question to India regarding Lankan Tamil protection
Author
Chennai, First Published Feb 22, 2020, 12:27 PM IST

போர்க்குற்றவாளிகளை காக்க இலங்கை அரசு செய்யும் சதியில் இருந்து  ஈழத்தமிழர்களை காத்து இந்தியா நீதி  வழங்குமா என பாமக இளைஞரணி தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் .  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-  இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது .  ஆனாலும்  இன்னும் தமிழர்களின் நிலப்பரப்பில் இலங்கையின்  சிங்களப்படைகள் விளக்கப்படவில்லை .  மீண்டும் ஈழத்தமிழர்களும் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வரும் நிலையில்,   அவர்களுக்கு இன்னும்  நிலம் ஒப்படைக்கப்படவில்லை .  இந்நிலையில் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்ற பிறகு அங்கு மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன . 

pmk youth wing leader and member of Parliament anbumani ramadoss asking question to India regarding Lankan Tamil protection

இலங்கை விடுதலை நாள் விழாவில் தமிழ் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது .   ஐநா மனித உரிமைகள் ஆணையர் இதை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் .  இந்நிலையில்  இலங்கை தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் இன்னும் அதிகரிக்குமே தவிர நீதி நிலைநாட்டப்படாது  என்பதுதான் மறுக்க முடியாத உண்மை .  இத்தகைய சூழலில் ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்திய அரசுக்கு உள்ளது .  ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த போர்க் குற்றவாளிகள் தப்பித்து விடாமல் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் .  அதேபோல் இலங்கை போர்ப்படைத் தளபதி ஷவேந்திர சில்வா ஒரு போர்க்குற்றவாளி என கூறி அமெரிக்காவில் அனுமதிக்க மறுத்துள்ளது .  அதாவது ஈழத் தமிழர்களுக்கு நிதி பெற்றுத் தருவதில் தங்களுக்குள் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது . 

pmk youth wing leader and member of Parliament anbumani ramadoss asking question to India regarding Lankan Tamil protection

அதேபோல் இந்தியாவும் ஈழத் தமிழர்களின் மீதான அக்கறையை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது .  போர்க்குற்ற விசாரணையில் இருந்து வெளியேறத் துடிக்கும் இலங்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதுடன் போர்க்குற்ற விசாரணையை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் . அதேபோல் ஐநா மனித உரிமை பேரவையில் தீர்மானத்தை முடித்து வைக்க வேண்டும் என புதிய தீர்மானத்தை பாகிஸ்தான் உதவியுடன் இலங்கை கொண்டுவர முயற்சி செய்தால் இந்தியா அதற்கு எதிராக வாக்களித்து அதை முறியடிக்க வேண்டும் என அன்புமணி  வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
 

Follow Us:
Download App:
  • android
  • ios