Asianet News TamilAsianet News Tamil

வன்னியர்கள் தியாகம் செய்து வாங்கிய இடஒதுக்கீட்டில் கருணாநிதி அவங்க ஜாதியையும் சேர்த்துட்டாரு... ஆதாரம் கூட இருக்கு!!

இப்படி, "தியாகம் செய்தது வன்னியர்கள்: பயன் அடைந்தது மு.க. ஸ்டாலின் சாதி!" என MBC இடஒதுக்கீட்டில் அக்கிரமம் செய்த கட்சிதான் திமுக!" ஆதாரம்: Government of Tamil Nadu, The Second Backward Classes Commission Report 1985 என ஆதாரத்தோடு அறிக்கை வெளியிட்டுள்ளார் பசுமை தாயகம் அருள் ரத்தினம்.

PMK released statements against MK Stalin
Author
Chennai, First Published Oct 9, 2019, 2:25 PM IST

'இந்திய விடுதலைக்கு காரணம் பிரிட்டிஷ் மகாராணி' என்பது போல, "வன்னிய சமுதாயத்தினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அரசு ஆணை வெளியிட்டதோடு மட்டுமின்றி- அவர்களை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கலைஞர் தான்" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆனால், வன்னியர்கள் உயிர்த்தியாகம் செய்த போராட்டத்தை பயன்படுத்தி, கலைஞர் கருணாநிதி அவர் சாதிக்கு செய்துகொண்ட அநியாய சலுகை குறித்து எதுவும் குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.

எனவே, MBC இடஒதுக்கீட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு என்ன என்பதை நாமும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

தியாகம் செய்தது வன்னியர்கள்: பயன் அடைந்தது மு.க. ஸ்டாலின் சாதி!"

தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு முறையில், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு (BC) பட்டியலில் உள்ள சில சமூகங்கள் பெரும்பாலான இடங்களை எடுத்துக்கொள்கின்றன. எனவே, BC பட்டியலில் வாய்ப்பை பெறமுடியாமல் இருக்கும் - மிகவும் பின் தள்ளப்பட்ட சமூகங்களை தனியாக பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் 1969 சட்டநாதன் குழு, 1982 அம்பாசங்கர் குழு ஆகியவை பரிந்துரை அளித்தன.

'BC பட்டியலில் அப்போது இருந்த 222 சாதிகளில் வெறும் 34 சாதிகள் மிக அதிகமான இடங்களை அபகரிக்கிறார்கள். எனவே, போதுமான வாய்ப்பு கிடைக்காத சாதிகளுக்கு தனியே MBC இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என்றது அம்பாசங்கர் குழு.

இந்த சூழலில், அனைத்து சாதிகளுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார இடஒதுக்கீடு வேண்டும் எனக்கோரி தியாகப் போராட்டத்தை நடத்தினார் மருத்துவர் இராமதாசு அய்யா. வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் 21 பேர் உயிர்த்தியாகம் செய்தனர்.

BC பட்டியலில் வாய்ப்பு கிடைக்காத சாதிகளுக்கு உரிமை வேண்டும். வாய்ப்பு கிடைக்காத சாதிகளில் மிகப்பெரிய சமூகம் வன்னியர்கள் என்பதால் அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் வன்னியர் சங்கத்தின் கோரிக்கை.

ஆனால், இந்த போராட்டத்தால் "நோகாம நொங்கு தின்றவர்" கலைஞர் கருணாநிதி! அதுகுறித்து விரிவாக பார்ப்போம்:

"கருணாநிதியின் சுய சாதிப்பற்று"

BC பட்டியலில் அப்போது இருந்த 222 சாதிகளில் வெறும் 34 சாதிகள் மிக அதிகமான இடங்களை அபகரிக்கிறார்கள். இந்த 34 சாதிகளின் மக்கள் தொகை 41%. ஆனால், 77% இடங்களை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால், மீதமுள்ள 59% மக்களை கொண்ட 188 சாதிகளுக்கு வெறும் 23% இடங்கள் தான் கிடைக்கின்றன. போதுமான வாய்ப்பு கிடைக்காத சாதிகளுக்கு தனியே MBC இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றது அம்பாசங்கர் குழு.

BC இடஒதுக்கீட்டில் அளவுக்கு அதிகமான இடங்களை அபகரிப்பதாக, அம்பாசங்கர் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட 34 சாதிகளில் ஒரு சாதி கலைஞர் கருணாநிதியின் 'இசைவேளாளர்' சாதியும் ஆகும். அந்த சாதியினர் தமது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட இருமடங்கு அதிக இடங்களை BC இடஒதுக்கீட்டில் எடுத்துக்கொள்வதாக குறிப்பிட்டது அப்பாசங்கர் குழு.

ஆனால், போராட்டம் நடத்திய வன்னியர்களையும் சேர்த்து 108 சாதிகளுக்கு MBC இடஒதுக்கீடு அளிப்பதாகக் கூறிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, அதற்கான பட்டியலை 1989-ல் உருவாக்கும் போது அதில் தனது இசை வேளாளர் சமூகத்தையும் சேர்த்துக்கொண்டார்.

(அதாவது, ஏற்கனவே BC பட்டியலில் அளவுக்கு அதிகமாக பயனடைந்த சாதி என்று அம்பாசங்கரால் குறிப்பிடப்பட்ட சாதியை, அதைவிட அதிக சலுகைகள் அளிக்கும் விதமாக MBC பட்டியலில் சேர்த்தார் கலைஞர் கருணாநிதி).

இன்று இந்தியாவிலேயே மிக அதிக ஊதியம் பெரும் கலாநிதி மாறன் குடும்பம் கூட MBC பட்டியலில் இடம்பிடித்திருப்பதற்கு இதுதான் காரணம்!

"நல்லவாயன் சம்பாதிக்க நாரவாயன் திங்கற கதை"

BC பட்டியலில் வாய்ப்பு கிடைக்காத சாதிகளுக்கு உரிமை வேண்டும். வாய்ப்பு கிடைக்காத சாதிகளில் மிகப் பெரிய சமூகம் வன்னியர்கள் என்பதால் அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் வன்னியர் சங்கத்தின் கோரிக்கை. அதற்காகத்தான் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் மாபெரும் தியாகப் போராட்டத்தை நடத்தினார்.

ஆனால், "நல்லவாயன் சம்பாதிக்க நாரவாயன் திங்கற கதையா இருக்கு" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல, மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக போராடினார். போராட்டம் நடத்திய வன்னியர்களுக்கு MBC இடஒதுக்கீடு அளிப்பதாகக் கூறி, ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திய தனது இசைவேளாளர் சமூகத்தையும் MBC பட்டியலில் சேர்த்தார் கருணாநிதி.

இப்படி, "தியாகம் செய்தது வன்னியர்கள்: பயன் அடைந்தது மு.க. ஸ்டாலின் சாதி!" என MBC இடஒதுக்கீட்டில் அக்கிரமம் செய்த கட்சிதான் திமுக!" ஆதாரம்: Government of Tamil Nadu, The Second Backward Classes Commission Report 1985 என ஆதாரத்தோடு அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios