Asianet News TamilAsianet News Tamil

வடக்கே வன்னியர்கள் தெற்கே தேவேந்திரர்கள்... பிரதமரை புகழ்ந்து ராமதாஸ் ட்வீட்...!

தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்து சென்னை விழாவில்  பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ்  கூறியுள்ளார். 

PMK Ramadoss wishes pm modi speech
Author
Tamil Nadu, First Published Feb 14, 2021, 4:25 PM IST

தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்து சென்னை விழாவில்  பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ்  கூறியுள்ளார். 

தமிழகத்தில் தற்போது தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியலில் தனித்தனியாக உள்ள தேவேந்திர குலத்தான், கல்லாடி, பள்ளர், குடும்பன், கடையான், பண்ணாடி, வத்திரியன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை இணைத்து, ‘தேவேந்திர குல வேளாளர்’ என ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள்  நடத்தப்பட்டு வருகின்றன.

PMK Ramadoss wishes pm modi speech

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. நேற்று இந்த மசோதா மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடியும் இதுகுறித்துப் பேசியிருந்தார். 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் என இனி அழைக்கப்படுவர் என பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 

PMK Ramadoss wishes pm modi speech

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில்;- பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை #தேவேந்திரகுலவேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில்  பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து எவரும் பேசுவதற்கு முன்பே நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன் 05.03.1989-இல் மதுரை தமுக்கம் திடலில் #ஒருதாய்மக்கள்  மாநாட்டை நான் நடத்தியதும் என் மனதில் நிழலாடுகின்றன என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios