இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கேந்திரிய வித்யாலயா, ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தீர்மானித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளிகள் அளவில் OBC இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படுவது புரட்சிகரமான செயலாகும். வாழ்க சமூகநீதி.

பள்ளிகள் நிலையில் OBC இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்யவுள்ள மத்திய அரசு, மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு  இடஒதுக்கீடு இல்லை என்ற குறையை போக்க வேண்டும். அந்த இடங்களுக்கும் OBC இடஒதுக்கீட்டை அறிமுகம்  செய்து சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்மழையால் நெற்பயிர்கள் தலைசாய்ந்து சேதம். ஏற்கனவே ஆனைக்கொம்பன் ஈ, இலைச்சுருட்டு புழு தாக்குதலால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில் இது கூடுதல் இழப்பு. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

சூல் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள கரிசல்பூமி எழுத்தாளர் சோ. தர்மனுக்கு வாழ்த்துகள். இயற்கையின் வளங்களையும், வரப்பிரசாதங்களையும் தனது வயிற்றில் சுமக்கும் நீர்நிலைகளின் முக்கியத்துவதை வலியுறுத்துகிறது சூல் நாவல். இயற்கையை போற்றும் இத்தகைய படைப்புகள் நிறைய வர வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.