ராமதாசும், வன்னிய சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குரு வெகுநாட்களாக அரசியல் ரீதியாக நல்ல நட்புறவில் இருந்து வந்தவர்கள். பாமகவின் மூத்த உறுப்பினராக பணிபுரிந்தவர் குரு. உடல்நிலைக் குறைவு காரணமாக குரு கடந்த ஆண்டு மரணமடைந்தார்.

இந்நிலையில் மறைந்த வன்னிய சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பிறந்த நாள் அண்மையில் அச்சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் காடுவெட்டி குருவின் தங்கை மீனாட்சி பேசினார். அப்போது அவருடைய பேச்சு பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் அமைந்தது. அவர் பேசிய வீடியோ சமூக வலைதளஙக்ளில் வைரலாக பரவி வருகிறது.

இது தொடர்பாக பாமகவின் மாநில துணை பொதுச் செயலாளர் வைத்தியலிங்கம் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மீனாட்சி மீது 4 பிரிவுகளில் வழக்கு தொடர்ப்பட்டதை தொடர்ந்து, முன் ஜாமின் வழங்கக் கோரி, மீனாட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.