உடனடியாக 3 வார முழு அடைப்பை அறிவித்தால் மட்டுமே அந்த நோக்கம் நிறைவேறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தி இருக்கிறார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கொரோனா நோயால் ஒருவர் கூட தமிழகத்தில் உயிரிழக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின் விருப்பம் ஆகும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: உங்கள் நோக்கம் பாராட்டத்தக்கது தான். ஆனால், உடனடியாக 3 வார முழு அடைப்பை அறிவித்தால் மட்டுமே அந்த நோக்கம் நிறைவேறும். கொரோனா நோய்த் தொற்றை தடுக்க 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை 6 வார பரோல் அல்லது ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கைதிகளாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே என்ற பார்வை உன்னதமானது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளையுடன் முடிக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பிற அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பணிக்கு வரத்தேவையில்லை என்றும் அறிவிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் அச்சம் உச்சத்தை அடைந்த பிறகும் 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் அரசு தேர்வுத்துறை பிடிவாதம் காட்டுவது முறையல்ல. ஓரிரு தேர்வுகள் மட்டுமே மீதம் இருந்தாலும் கூட, அத்தேர்வுகளை அரசு ஒத்தி வைக்க வேண்டும்'' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.