Asianet News TamilAsianet News Tamil

அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக... 12 தொகுதிகளில் தனித்து போட்டி..!

புதுச்சேரியில் பாமகவுக்கு நேற்று தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதிருப்தியால் கூட்டணியில் இருந்து வெளியேறியது புதுச்சேரி பாமக

Pmk quits AIADMK-BJP alliance
Author
Tamil Nadu, First Published Mar 10, 2021, 12:20 PM IST

புதுச்சேரியில் பாமகவுக்கு நேற்று தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதிருப்தியால் கூட்டணியில் இருந்து வெளியேறியது புதுச்சேரி பாமக. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி என்.ஆர் காங்கிரஸ்-16,  பாஜக -10, அதிமுக 4 ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாமகவுக்கு சீட் ஒதுக்காததால் பாமக கூட்டணியில் இருந்து வெளியேறியது. Pmk quits AIADMK-BJP alliance

தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும் பாஜக-அதிமுகவிற்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என்.ஆர்.ரங்கசாமி தலைமை ஏற்கிறார். அவரே முதல்வர் வேட்பாளராகவும் களமிறங்குகிறார். ஆனாலும் "புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக உள்ளது" எனபுதுச்சேரி பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரேனா விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் பாமக பாமக தனியாக 12 தொகுதிகளில் போட்டி என அறிவித்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios