- Home
- Tamil Nadu News
- விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்து அவர் எப்போது விசாரணைக்கு ஆஜராவார்? என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகரும், தவெக தலைவருமான விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று (ஜனவரி 12) ஆஜரானார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி சென்ற விஜய், காலை 11 மணி அளவில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். சுமார் 11.30 மணி அளவில் அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டது.
விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன?
தனி அறையில் அமர வைக்கப்பட்ட விஜய்யிடம் 4 அதிகாரிகள் துருவி துருவி கேள்விகளை கேட்டனர். அதாவது கரூர் பிரசார கூட்டத்துக்கு ஏன் தாமதமாக வந்தீர்கள்? நீங்கள் பேசும்போது மக்கள் மயங்கி விழுந்தும் ஏன் பேச்சை நிறுத்தவில்லை? கரூர் கூட்டத்தில் குடிநீர், உணவு, மேலாண்மை வசதிகளை செய்யவில்லையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 மணி நேரம் சிபிஐ அலுவலகத்தில்
இந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் விஜய் பதில் கூறியுள்ளார். காலை 11.30 மணியில் இருந்து மாலை 3.45 வரை விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இடையில் மதிய உணவு சாப்பிட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
விசாரணை முடிந்தும் விஜய் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தனி அறையில் அமர வைக்கப்பட்டார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும், அவர் கூறிய பதிலையும் பிரிண்ட் செய்து கொண்ட சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.
விஜய்யிடம் அடுத்து அப்போது விசாரணை?
இதன்பிறகு மாலை 6 மணிக்கு பிறகு விஜய் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். விஜய்யிடம் இன்னும் சில கேள்விகளை கேட்க வேண்டியதுள்ளதால் அவரிடம் நாளை (ஜனவரி 13) 2வது நாளாக விசாரணை தொடரும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பொங்கல் பண்டிகை என்பதால் விசாரணையை தள்ளிவைக்க விஜய் தரப்பில் கேட்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ, பொங்கலுக்கு பிறகு விஜய் ஆஜராக அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 7 மணி நேரம் சிபிஐ அலுவலகத்தில் இருந்த விஜய், டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். நாளை அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

