கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனியாக மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டுமென பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் சீனாவில் தனியாக மருத்துமனை அமைத்து சிகிச்சை வழங்கியதால்தான் அங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என தெரிவித்துள்ள இவர் இது குறித்து அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார், அதில்,   தமிழகத்தில்  கொரோனா சமூக பரவல் தொடங்கி விட்டதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது ,  இது ஆபத்தின் அறிகுறி .

 

 தமிழகம் நிச்சயம் இத்தகைய சூழலை சமாளிக்க வேண்டுமானால் அதற்கு 144 தடை உத்தரவு மட்டும் போதுமானது அல்ல ,  மாறாக  தமிழக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை ஊரடங்கு உத்தரவு மூலம் இன்றைய நிலையை சமாளிக்க முடியும் . ஆனால் அதே நேரத்தில் மற்றொரு புறம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சென்னை , காஞ்சிபுரம் ,  ஈரோடு ,  மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர் .   இதை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

அதே போல்,  சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனி மருத்துவமனைகளில் வைத்திய சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் நோய் பரவலை தடுக்க முடிந்தது .  ஆகவே தமிழ்நாட்டிலும் நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டுமெனில் சீனாவைப் போல கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனி மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும் .  அதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படவேண்டும் ,  இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.