மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குருவின் மகள் திருமணம் இன்று எளிய முறையில் திருமணம் நடந்தது. 

பா.ம.க என்ற கட்சியின் முதுகெலும்பாகவும் வன்னிய இளைஞர்களின் ஹீரோவாக வலம் வந்தவர் காடுவெட்டி குரு. வன்னிய இளைஞர்களால் மாவீரன் என்று அழைக்கப்பட்டவர். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸின் அன்பை பெற்ற, காடுவெட்டி குரு, கடந்த மே மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். 

அதன் பிறகு, “காடுவெட்டி குரு மறைந்த நிலையில் வீட்டுக்கடன் கட்ட முடியாத அளவுக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே காடுவெட்டி குரு பயன்படுத்திய வாகனத்தை விற்க இருக்கிறோம். வாங்க விரும்புகிறவர்கள் அணுகவும்” என்று காடுவெட்டி குருவின் அக்காள் மகன், தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். 

இந்த விஷயம் பாமகவிரை சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து, பா.ம.க  குரு குடும்பத்துக்கு உதவ முன்வந்தது. இதனைத் தொடர்ந்து, குருவின் மகன் கனலரசன், தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது தாயாரை பல நாட்களாக காணவில்லை என்றும். அவரது உறவினர்கள் அவரை பலவந்தமாக எங்கோ அடைத்துவைத்திருக்கிறார்கள் என்றும் அவரை மீட்க ராமதாஸ் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த நிலையில் இன்று காடுவெட்டி குருவின்  மகள் விருதாம்பிகைக்கும் – குருவின் மூன்றாவது தங்கை சந்திரகலாவின் மகன் மனோஜூக்கும் இன்று எளிய முறையில் திருமணம் நடந்தது. திருமண விழாவில் மணமகன் மனோஜ் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். மணமகள் விருதாம்பிகாவின் தாயார் எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில் குருவின் மகன்  கனலரசன் மகளின் திருமணத்தில் கலந்துகொண்டார்.