Asianet News TamilAsianet News Tamil

செம்ம டென்ஷனில் ராமதாஸ்... பாமக முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்...!

இந்த தேர்தலில் காலையில் கட்சி சேர்ந்தால் மாலையில் சீட் என அரசியல் கட்சிகள் கடைபிடிக்கும் இந்த டெக்னிக் ஓர்க் அவுட் ஆக ஆரம்பித்துள்ளது. எனவே பலரும் கட்சி விட்டு கட்சி மாற தயாராகி வருகின்றனர். 

PMK Important Person Joint MK Stalin DMK
Author
Chennai, First Published Mar 16, 2021, 12:58 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காமால் அதிருப்தியில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கட்சி தாவும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அதிமுக வெளியிட்ட வேட்பாளர்கல் பட்டியலின் படி 3 அமைச்சர்கள், 41எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி பூசும் படியாக பகீர் குற்றச்சாட்டுக்களை பகிர்ந்து வருகின்றனர். 

PMK Important Person Joint MK Stalin DMK

சாத்தூர் தொகுதியில் சீட் கிடைக்காததால் அதிமுகவில் இருந்து விலகிய ராஜவர்மன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். அதுமட்டுமின்றி அன்றைய தினமே சாத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவும் கொடுத்திருந்தார். இதையடுத்து அன்று மாலை வெளியான அமமுக வேட்பாளர்கள் பட்டியலில் ராஜவர்மனுக்கு சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. 

PMK Important Person Joint MK Stalin DMK

அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காததால் சீற்றமடைந்த டாக்டர் சரவணன் ஸ்டாலினை தூக்கியெறிந்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். அவருக்கும் அன்றைய தினமே மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட பாஜக சீட் வழங்கியது. இந்த தேர்தலில் காலையில் கட்சி சேர்ந்தால் மாலையில் சீட் என அரசியல் கட்சிகள் கடைபிடிக்கும் இந்த டெக்னிக் ஓர்க் அவுட் ஆக ஆரம்பித்துள்ளது. எனவே பலரும் கட்சி விட்டு கட்சி மாற தயாராகி வருகின்றனர். 

PMK Important Person Joint MK Stalin DMK

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில  துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் பாமகவில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவில் இணைந்தார். புதுக்கோட்டை மாவட்ட பா.ம.க. செயலாளர் தரணி ரமேஷ், சிவகங்கை மாவட்ட பா.ம.க. செயலாளர் தை.ஆல்பர்ட் ராஜா மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க.வினர் 300-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.கவில் இணைந்தனர். திமுகவில் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிப்பு எல்லாம் முடிந்துவிட்டது, இருந்தாலும் அவர்களுடைய வழக்கமான யுக்தியின் படி ஸ்ரீதருக்கு வெயிட்டான பதவி ஒதுக்கப்படும் எனக்கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios