ஆளுநர் ஆர்.என் ரவி இதை செய்யணும்.. இது கட்டாயம்!..ஆளுநருக்கு ராமதாஸ் கொடுத்த அறிவுரை.!!

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தின் தேவையை ஆளுநர் உணர வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

Pmk founder Ramadoss advice to tn governor rn Ravi at online rummy issue

தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஒருமனதாக நிறைவேறியது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்படுகிறது.

Pmk founder Ramadoss advice to tn governor rn Ravi at online rummy issue

இதையும் படிங்க..வந்தாச்சு சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்.. எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா.? முழு விபரம்

சூதாட்டத் தடை சட்டத்தை தமிழக அரசு மீண்டும் தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். 2021-ஆம் ஆண்டு சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் 47 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Pmk founder Ramadoss advice to tn governor rn Ravi at online rummy issue

இத்தகைய சூழலில் புதிய சட்டம் மிகவும் தேவை ஆகும். ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தின் தேவையை ஆளுநர் உணர வேண்டும். இந்த சட்டத்திற்கு இப்போது ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டியது அரசியலமைப்பு சட்டத்தின்படி கட்டாயம் என்பதால் அதை அவர் உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..எனக்கு பாதுகாப்பு வேணும், இல்லைனா.. அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் கோர்ட்டில் மனு - வெளியான பகீர் தகவல்

இதையும் படிங்க..ஹிண்டன்பர்க்கின் அடுத்த டார்கெட்.!! அதானிக்கு அடுத்து மாட்டப்போகும் கம்பெனி எது தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios