Asianet News TamilAsianet News Tamil

உச்ச நீதிமன்ற இட ஒதுக்கீடு தீர்ப்பு... பாஜக, திமுகவை வெளுத்து வாங்கிய டாக்டர் ராமதாஸ்... ஏன் தெரியுமா?

நடப்பாண்டில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது என்று என்ற தீர்ப்பு சமூகநீதிக்கு பின்னடைவாகும் என்று பாமக நிறுனவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

PMK founder Dr.Ramadoss on supreme court verdict
Author
Chennai, First Published Oct 26, 2020, 8:58 PM IST

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்த ஆணையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த ஆண்டாவது சமூகநீதி மலரும் என எதிர்பார்த்த நிலையில் இத்தீர்ப்பு மிகவும் ஏமாற்றமளிக்கிறது.PMK founder Dr.Ramadoss on supreme court verdict

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும்போது, அதில் பிற பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. அதை எதிர்த்து அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி பாமக சார்பிலும், பிற கட்சிகள் சார்பிலும் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை 27-ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், “மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை. இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க குழு அமைத்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்; ஆனாலும் நடப்பாண்டில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது’’ என ஆணையிட்டிருந்தது. அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதுதான் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறது. இது சமூகநீதிக்கு பின்னடைவாகும்.

PMK founder Dr.Ramadoss on supreme court verdict
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நடப்பாண்டில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது என்று மத்திய அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதுதான் இப்படி ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டதற்கு காரணம் ஆகும். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது ஆகும். அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறி விட்டது. அதை மதித்து நடப்பாண்டிலேயே இட ஒதுக்கீட்டை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருக்கும். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், சமபந்தமே இல்லாத வழக்குகளைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்ற மத்திய அரசு நிலைப்பாடு எடுத்ததுதான் இந்த பின்னடைவுக்கு காரணம் ஆகும்.

PMK founder Dr.Ramadoss on supreme court verdict
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைத்து விடக் கூடாது என்பதற்காக சில சக்திகள் திட்டமிட்டே குழப்பங்களை ஏற்படுத்தி வந்தன. அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பாமக சார்பில் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணிதான் முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்ததுடன், நீதிபதிகளையே ஆத்திரமூட்டும் வகையில் வாதங்களை வைத்ததால்தான், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என்று கூறி, இந்த விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அனைத்து மனுதாரர்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.PMK founder Dr.Ramadoss on supreme court verdict
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, 27% இடஓதுக்கீட்டை செயல்படுத்த தயாராக இருப்பதாக மத்திய அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 50% இட ஒதுக்கீட்டை திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியதால்தான், இட ஒதுக்கீட்டின் அளவு குறித்து முடிவெடுக்க குழுவை அமைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது; அதனால்தான் நடப்பாண்டில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு 27% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்ற நிலையில், அதை அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தியிருந்தால் நடப்பாண்டிலேயே 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்திருக்கும். அதற்கான வாய்ப்பு திட்டமிட்டே முறியடிக்கப்பட்டது.
அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்னும் தொடங்கப்பட வில்லை. சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி, அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை அக்டோபர் 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அக்குழு நாளைக்குள் முடிவெடுத்தால் அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் எந்த தடையும் இருக்காது.

PMK founder Dr.Ramadoss on supreme court verdict
எனவே, இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கும் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வை நிறுத்தி வைத்து, அடுத்த சில நாட்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவெடுத்து உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இது சாத்தியம்தான். இந்தக் கோரிக்கையை தமிழ்நாட்டிலிருந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios