Asianet News TamilAsianet News Tamil

அட.... அரைவேக்காடே! பேப்பர் கூட படித்ததில்லையா? குலத்தொழிலே கொலை செய்வதுதானே... சிவசங்கரை கேவலமாக திட்டிய பாமக!

‘‘பரம பிதாவே இவர்கள் தெரிந்தே தவறு செய்கிறார்கள். இவர்களை மன்னித்து விடுங்கள்’’ ஏனெனில், சொரணையற்று கிடந்தாலும் நீயும் என் சொந்தம்! என அறிக்கை விட்ட சிவசங்கரை  கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து தள்ளியுள்ளார் பாமக அருள் ரத்தினம்.
 

PMK Arul rathinam criticised DMK Sivashankar
Author
Chennai, First Published Sep 20, 2019, 11:37 AM IST

‘‘பரம பிதாவே இவர்கள் தெரிந்தே தவறு செய்கிறார்கள். இவர்களை மன்னித்து விடுங்கள்’’ ஏனெனில், சொரணையற்று கிடந்தாலும் நீயும் என் சொந்தம்! என அறிக்கை விட்ட சிவசங்கரை  கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து தள்ளியுள்ளார் பாமக அருள் ரத்தினம்.

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மணிமண்டபத் திறப்பு விழா கடந்த 17ஆம் தேதி நடந்தது. அதில் பேசிய ராமதாஸ், “குரு வாழும் காலத்திலே அவரை இங்கே வளராமல் செய்வதற்கு, அவரை கொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தவர்கள் அப்போது ஆண்ட திமுகவினர். அவரை கொல்வதற்கு பல்வேறு சதித் திட்டங்களை தீட்டினார்கள். இதனை நானும் ஜி.கே.மணியும் முறியடித்தோம். இல்லை என்றால் குருவை எப்போதோ நாம் இழந்திருப்போம்” என்று கூறியிருந்தார். இதற்கு  அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவருமான எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலடி அறிக்கையில்  குரு இறப்பிற்கான வன்னிய இளைஞர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, திமுக மீது பொய் புகார் கூறி சேற்றை அள்ளி இறைக்கிறார் ராமதாஸ்.இதை திமுக சட்ட ரீதியாக சந்திக்கும்” என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

PMK Arul rathinam criticised DMK Sivashankar

வழக்கமாக துரைமுருகன் பதில் அறிக்கைவெளியிடுவார் நினைத்திருந்த பாமகவிற்கு நோஸ்கட் பண்ணும் விதமாக அரியலூர் மாவட்டத்திலிருந்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவருமான எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், கடுப்பான பாமக அருள் ரத்தினம், அறிக்கை விட்ட  சிவசங்கரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து தள்ளியுள்ளார்.

அதில்,  "கொலைகள் அவர்களின் குலத்தொழில்!" காடுவெட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரன் ஜெ.குருவின் நினைவு மணிமண்டபத்தை தியாகிகள் நாளில் திறந்து வைத்து பேசிய மருத்துவர் அய்யா அவர்கள், 2006௧1 ஆட்சிக்காலத்தில் மாவீரன் ஜெ.குருவை படுகொலை செய்ய திமுக தலைமையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்கள் குறித்து விளக்கியிருந்தார். மருத்துவர் அய்யாவின் இந்த குற்றச்சாட்டு திமுக தலைமையின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அச்சத்தை பரவ வைத்துள்ளது; அதிர்ச்சியை பெருக வைத்துள்ளது.

PMK Arul rathinam criticised DMK Sivashankar

"பஞ்சுமிட்டாய் வன்னியர்"

அதனால் தான் அய்யாவின் குற்றச்சாட்டுக்கு பஞ்சுமிட்டாய் வன்னியரான சிவசங்கரை வைத்து மறுப்பு சொல்ல வைத்திருக்கிறது திமுக தலைமை. அவரும் தம்மிடமுள்ள அத்தனை அறிவையும் மொத்தமாய் திரட்டி அட்டகாசமான சில வினாக்களை தொடுத்துள்ளார். அந்த அதிபுத்திசாலித்தனமான வினாக்கள் என்ன தெரியுமா?

1. தி.மு.க ஆட்சி நடைபெற்றது 2006௨011 ஆம் ஆண்டு. எட்டு ஆண்டுகள் கழித்து இந்தக் குற்றச்சாட்டை சொல்லும் நோக்கம் என்ன ?

2. ஆதாரம் இருந்தால் காவல்துறையில் புகார் கொடுக்கலாமே ?

- இவை தான் அந்த அடிமையின் வினாக்கள்.

அட.... அரைவேக்காடே!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து பட்டம் வாங்கி, இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நீ அன்றாட செய்தித்தாள்களை கூட படித்ததில்லையா?

அதுமட்டுமின்றி, ‘‘அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டாய்’’ என்று நினைத்து கொலைச்சதித் திட்டத்தில் உனது கட்சியின் உள்ளூர் தலைவர்கள் உன்னை சேர்த்துக் கொள்ளவில்லையா?

அரியலூர் மாவட்டத்தில் மாவீரனின் வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரைத் தீர்த்துக் கட்டத் துடித்தவர்களே அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட திமுகவில் உருவெடுத்த திடீர் தலைவரும், அவரது எடுபிடிகளும் தானே.

"சென்னையில் சதித்திட்டம்"

உள்ளூர் கூலிப்படையை வைத்து மாவீரனை கொலை செய்ய சென்னை வரை சென்று தீட்டப்பட்ட சதித் திட்டம் குறித்து உண்மையாகவே உனக்கு எதுவும் தெரியவில்லை என்றால், எடுபிடிகளின் அளவுக்குக் கூட உன்னை திமுக தலைமையும், திடீர் தலைமையும் மதிக்கவில்லை என்று தான் பொருள் ஆகும்.

2008-ஆம் ஆண்டு காலத்தில் திமுகவுக்கும், பா.ம.கவுக்கும் இதுதொடர்பாக நடந்த அறிக்கைப் போர்களையும், கருத்து மோதல்களையும் நீ அறிந்திருக்கவில்லை என்றால், மலிவுவிலை மதுவை ஏற்றிக்கொண்டு மாதக்கணக்கில் மட்டையாகிக் கிடந்திருக்கிறாய் என்று தான் பொருள்.

PMK Arul rathinam criticised DMK Sivashankar

மாவீரன் குருவுக்கு எதிரான திமுகவின் கொலைச்சதியை திமுக ஆட்சி முடிந்து 8 ஆண்டுகள் கழித்து எங்கள் அய்யா கூறவில்லை. திமுக ஆட்சியில் இருந்த காலத்திலேயே 2008-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதியே திமுகவின் கொலைச்சதிக்கு கண்டனம் தெரிவித்து மருத்துவர் அய்யா அவர்கள் மிகநீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் மட்டும் இதோ....

"மருத்துவர் அய்யா அறிக்கை"

‘‘வன்னியர் சங்க தலைவர் குருவை கைது செய்வதோடு நின்று விடாமல், அவரை தீர்த்து கட்டவும் உயர்நிலை அளவில் சதி நடக்கிறது என்பது பற்றியும், அவ்வப்போது எங்களது கவனத்திற்கு சேதிகள் வந்து கொண்டிருக்கிறது.

மிக அண்மையில் கூட சென்னையில் ஒரு மூத்த அமைச்சரின் வீட்டில் இதற்காக ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டு இருக்கிறது என்றும் எங்களுக்கு தகவல் எட்டியிருக்கிறது. இந்த பின்னணியில் தான் இந்த விவகாரம் வெடித்து திடீரென்று வெடித்து கிளம்பியிருக்கிறது என்பதும் புரிகிறது.

அதிகாரம் கையில் இருந்தால்..: பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவரை இதற்காகவே உலவ விட்டிருக்கிறார்கள் என்று பல முறை முறையிட்டு இருக்கிறோம். குருவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று முதல்வரிடமே முறையிட்டு இருக்கிறோம். குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டவர்களிடமும் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது’’ என்று மருத்துவர் அய்யா குற்றஞ்சாட்டியிருந்தார்.

PMK Arul rathinam criticised DMK Sivashankar

காவல்துறையில் புகார் ‘‘ஆதாரம் இருந்தால் காவல்துறையில் புகார் கொடுக்கலாமே?’’ போதை தெளிந்தவனின் மனநிலையில் இருந்து அந்த அடிமை அடுத்த வினாவை எழுப்பியிருக்கிறது.

மாவீரன் ஜெ.குருவை கூலிப்படையை கொண்டு கொலை செய்யவும், தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு, சிறையில் வைத்தே படுகொலை செய்யவும் திமுக சதி செய்திருந்தது. அப்போது திமுக தான் ஆளுங்கட்சி. உளவுப்பிரிவு திமுகவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனாலும், அதையும் மீறி திமுகவின் சதித்திட்டத்தை பா.ம.க. தலைமை ஆதாரங்களுடன் அறிந்தது.

சென்னையில் மூத்த அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற சதி ஆலோசனைகள் அனைத்தையும் அறிந்த பின்னர் அவற்றை காவல்துறை தலைமையின் கவனத்திற்கு பா.ம.க. தலைமை கொண்டு சென்றது. இதற்காக அப்போதைய காவல்துறை டிஜிபி கே.பி.ஜெயின், சட்டம் - ஒழுங்குப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர் டி.கே.இராஜேந்திரன் ஆகியோரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், ஓய்வறியா உழைப்பாளியுமான ஜி.கே மணி 6 முறை சந்தித்து மாவீரன் ஜெ.குருவை படுகொலை செய்ய நடக்கும் சதிகள் குறித்து எடுத்துரைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாவீரனுக்கு ஏதேனும் ஆனால் என்ன நடக்கும் என்பது திமுக தலைமைக்கும் தெரியும்; காவல்துறைக்கும் தெரியும். அதுவும் மாவீரன் குருவை படுகொலை செய்ய திமுக தலைமை தான் சதித்திட்டம் தீட்டியது என்பதற்கான ஆதாரங்களை காவல்துறையிடம் பா.ம.க. தலைவர் கொடுத்து விட்டதால், விளைவுகளை எண்ணி அஞ்சி சதித் திட்டத்தை கைவிட்டது என்பது தான் உண்மை.

கொலை குலத்தொழில்

திமுகவினருக்கு படுகொலை செய்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. நடைபயிற்சிட்யின் போது வெட்டிக்கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன், மதுரை தினகரன் அலுவலத்தில் எரித்துக் கொல்லப்பட்ட 3 பணியாளர்கள், மதுரையில் வெட்டிக் கொல்லப்பட்ட பொட்டு சுரேஷ், 2ஜி ஊழல் வழக்கில் திமுக தலைமைக்கு உள்ள தொடர்பு சிபிஐக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, தற்கொலை என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்ட ஆ.இராசாவின் பினாமி சாதிக்பாட்சா, முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா என திமுகவின் படுகொலை பட்டியல் மிகவும் நீளமானது.

திமுகவினரின் குலத்தொழிலே கொலை செய்வது தான் என்பதற்கு இவற்றை விட கூடுதல் ஆதாரங்கள் தேவையில்லை.

கொலையை குலத்தொழிலாக செய்பவர்களின் பாச்சா மாவீரன் ஜெ.குருவிடம் பலிக்கவில்லை என்றால் அதற்கு காரணம் அவரைச் சுற்றி மருத்துவர் அய்யா அவர்கள் அமைத்து வைத்திருந்த பாதுகாப்பு வளையம்.

சில கிணற்றுத்தவளைகள் இதையெல்லாம் அறியாமல் கத்திக் கொண்டிருக்கலாம். பிழைப்புக்காக அப்படி செய்யும் அரியலூர் அரைவேக்காடுகளை நினைக்கும் போது, ‘‘நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு’’ என்ற பாரதியாரின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

ஆனாலும், எங்களின் அடி மனது சொல்வது என்னவென்றால், ‘‘பரம பிதாவே இவர்கள் தெரிந்தே தவறு செய்கிறார்கள். இவர்களை மன்னித்து விடுங்கள்’’ என்பது தான். ஏனெனில், சொரணையற்று கிடந்தாலும் நீயும் என் சொந்தம்! என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios