திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டில் ஒன்றையாவது எட்டிப்பிடித்திருக்கும் நிலையில் கூட்டணியில் சேர்வதற்குள் சம்பந்தப்பட்ட கட்சியை தவித்துத் தண்ணி குடிக்க வைத்த பா.ம.க.வும், தேமுதிகவும் போட்டியிட்ட 11 இடங்களில் ஒன்றில் கூட கரையேறவில்லை.

தர்மபுரி தொகுதியில் இன்று காலைமுதல் அவ்வப்போது முன்னணியில் வந்து பின்னர் பின்னணிக்குப் போன அன்புமணி இறுதியில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். இதன் மூலம் அதிமுக கூட்டணியில் ஐக்கியமான இரு தோழமைக் கட்சிகளும் போட்டியிட்ட 11 தொகுதிகளையும் பறிகொடுத்து தரித்திர சரித்திரம் படைத்திருக்கின்றனர்.

இந்த இரண்டு கட்சிகளும் அதிமுகவில் கூட்டணி சேர்வதற்கு முன்பு பண்ணிய பில்ட் அப்களைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்...அப்பா மகன் ராமதாஸ்கள் அதிமுகவுக்குப் போட்ட பைசா பெறாத பத்துக் கோரிக்கைகள், பிரஸ் மீட்டில் கேள்வி கேட்ட அத்தனை நிருபர்கள் மீது எரிந்து விழுந்து ‘தண்ணியக்குடி தண்ணியக்குடி’என்று ஆணவமாய் நக்கலடித்ததும்...இன்னொரு பக்கம் தேமுதிகவில் கேப்டன் விஜய்காந்த் மட்டும் சைலண்டாக இருக்க அவரது மகன் விஜய பிரபாகரன்...’எங்க வீட்டுப்பக்கம் எதுக்குய்யா வர்றீங்க? என்று ஒருமையில் பேசியதும் தன்னை பத்து ஜெயலலிதாவாய் நினைத்துக்கொண்டு பிரேமலதா விஜயகாந்த் பேசிய ஆணவப் பேச்சுக்களும் என்றும் நினைவில் கொள்ளத்தக்கவை. அந்தப் பேராசைகளுக்கும் பில்ட் அப்களுக்கும் கொடுக்கப்பட்ட தண்டனைதான் இந்த 11க்கு பூஜ்யம் என்ற ரிசல்ட்.