அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியது உண்மைதான். அப்போது இருந்த சூழல் வேறு, தற்போது உள்ள சூழல் வேறு. தற்போது கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. எனவே தேர்தல் வியூகத்தை மாற்றியுள்ளோம். 

இந்நிலையில் முரண்பட்ட கூட்டணி குறித்து சென்னையில் இன்று பாமக இளைஞர் அணித் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியது உண்மைதான். அப்போது இருந்த சூழல் வேறு, தற்போது உள்ள சூழல் வேறு.  தற்போது கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. எனவே தேர்தல் வியூகத்தை மாற்றியுள்ளோம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, தேர்தலில் களமிறங்கிய போது, ஊடகங்கள் ஏன் அங்கீகாரம் கொடுக்கவில்லை? என்றும் அன்புமணி செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

 

தொடர்ந்து பேசிய அன்புமணி, விவசாய கடன் ரத்து, காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு ரத்து, பூரண மதுவிலக்கு உள்ளிட்ட திட்டங்கள் வரக்கூடாது என்ற கோரிக்கையை பார்த்துக்கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. ஆனால் அவர்கள் கூட்டணி வைத்துள்ளார்களே? திருமாவளவன், ஸ்டாலினையும், திமுகவையும் விமர்சிக்கவில்லையா? மேலும் பாஜகவை விமர்சித்து வந்த சிவனோ கூட்டணி வைத்துள்ளது என்று பல்வேறு முரண்பட்ட கூட்டணிகளையும் அன்புமணி சுட்டிக்காட்டினார். 

மக்களவை கூட்டணி தொடர்பாக திமுக கட்சி உங்களை அணுகினார்களா என செய்தியாளர்களை கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எங்களை அணுகினர் என தெரிவித்தார். தோல்வி பயத்தால் ஸ்டாலின் எங்கள் மீது அவதூறுகளை வீசுகிறார், ஆனால் நாங்கள் அவரை மறுவிமர்சனம் செய்ய மாட்டோம் என கூறினார்.