Asianet News TamilAsianet News Tamil

பி.எம்.கேர்ஸ் கணக்குகள்..தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு..பொது அமைப்பு அல்ல என விளக்கம்!

பி.எம்.கேர்ஸ் அமைப்புக்கு கார்ப்பரேட் நிறுவனங்களும் பல்வேறு தொழில் நிறுவனங்களும் நிவாரண நிதியை வழங்கின. இந்நிலையில் பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பாக தணிக்கை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வந்தன. எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கைகளை பாஜக விமர்சித்துவந்தது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், பிஎம் கேர் அமைப்புக்கு வந்துள்ள நிதி பற்றி பெங்களூரு அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக சட்ட மாணவர் கந்துகுரி பிரதமர் அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
 
PM office refuse to explain about pm cares fund
Author
Delhi, First Published May 31, 2020, 9:45 PM IST

பி.எம்.கேர்ஸ் கணக்குகளை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

PM office refuse to explain about pm cares fund
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 24 அன்று முதல் கட்டமாக ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் ‘பி.எம். கேர்ஸ்’ என்ற பெயரில் நிவாரண நிதி திரட்டும் அறிவிப்பை மோடி வெளியிட்டார். ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதி என்ற பெயரில் ஒரு பொது அமைப்பு இருக்கும்போது, புதிதாக பி.எம். கேர்ஸ் ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.PM office refuse to explain about pm cares fund
பி.எம்.கேர்ஸ் அமைப்புக்கு கார்ப்பரேட் நிறுவனங்களும் பல்வேறு தொழில் நிறுவனங்களும் நிவாரண நிதியை வழங்கின. இந்நிலையில் பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பாக தணிக்கை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வந்தன. எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கைகளை பாஜக விமர்சித்துவந்தது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், பிஎம் கேர் அமைப்புக்கு வந்துள்ள நிதி பற்றி பெங்களூரு அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக சட்ட மாணவர் கந்துகுரி பிரதமர் அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

PM office refuse to explain about pm cares fund
கந்துகுரி தகவல் கேட்டு 30 நாட்கள் கடந்த பிறகும் அவருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவர் மீண்டும் முறையிட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் அலுவலக அதிகாரியிடம் பதில் வந்துள்ளது. அதில், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2 ஹெச்.சி.யிபடி பி.எம். கேர் நிதியம் என்பது பொது அமைப்பு அல்ல. இதுதொடர்பான தகவல்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இதை ஏற்க மறுத்துள்ள கந்துகுரி, மேல்முறையீல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல வழக்கறிஞர் அபய் குப்தா ஏற்கனவே எழுப்பிய கேள்விக்கும் இதே பதிலைத்தான் பிரதமர் அலுவலகம் அளித்திருந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios