Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்காவில் முதல் முறை… அதிபர் பைடனை சந்தித்த பிரதமர் மோடி

அமெரிக்காவில் முதல் முறை… அதிபர் பைடனை சந்தித்த பிரதமர் மோடி

PM Modi Washington met biden
Author
USA, First Published Sep 25, 2021, 6:46 AM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

PM Modi Washington met biden

குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருக்கிறார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்த மாநாடு நடைபெற்றது. வெள்ளை மாளிகை முன்பாக இந்தியர்கள் திரண்டு நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குவாட் மாநாட்டுக்கு பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அவர் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

சந்திப்பின் போது இந்தியா வருமாறு அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று நன்றி தெரிவித்தார் பைடன்.

சந்திப்பில் இரு நாடுகள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம், கோவிட் நிலவரம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது துணை அதிபர் கமலா ஹாரிசும் உடன் இருந்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios