ஓவர் டென்ஷனில் மோடி..! MLA வோ MP யோ .? இப்படி செய்தால் சீட் கிழியும்..!
மத்திய பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவான ஆகாஷ் விஜயவர்கியா, அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய வீடியோ சென்ற வாரம் வைரலாக பரவியது.
ஓவர் டென்ஷனில் மோடி..! MLA வோ MP யோ .? இப்படி செய்தால் சீட் கிழியும்..!
மத்திய பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவான ஆகாஷ் விஜயவர்கியா, அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய வீடியோ சென்ற வாரம் வைரலாக பரவியது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி கட்சியிலிருந்து நீக்க ஆயத்தமாகி வருவதாக தகவல் கசிந்து உள்ளது.
பாஜக தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியா மகன்தான் ஆகாஷ் விஜயவர்கியா. சட்டமன்ற உறுப்பினரான இவர் சென்ற வாரம் மாநகர அதிகாரி ஒருவரை பேட்டால் தாக்கினார். ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி ஊழியர்கள் முற்பட்டுள்ளனர். அப்போது, "அங்கு பொதுமக்கள் வசித்து வருவதாகவும், அப்பகுதியில் இருந்து வெளியேற முடியாது" என ஆகாஷ் தெரிவித்து இருந்தார்.
அப்போது ஆகாஷிற்கிலும் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதால் தனது ஆதரவாளர்களுடன் சென்று அதிகாரியை பேட்டால் தாக்கினார்ஆகாஷ் .அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பாக,ஆகாஷ் கைது செய்யப்பட்டு,சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவரை வரவேற்பதற்காக அவருடைய ஆதரவாளர்களும் சென்றனர்.
இதுகுறித்து பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பிரதமர் மோடி, இது போன்ற செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும் யார் மகனாக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் வெளியேற்ற வேண்டும் என தெரிவித்து உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாக கூறப்படுகிறது. இதுபோன்ற தேவையில்லாத சம்பவங்களால் பாஜக மக்கள் மத்தியில் ஒரு அடாவடி கட்சியாக நினைக்க தோன்ற வைக்கும் என பிரதமர் கோபப்பட்டு பேசினாராம். தப்பு செய்தால் யாராக இருந்தாலும் கண்டிப்பார் மோடி என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.