தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என  2வது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோசை கடந்த மார்ச் 1-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். இந்நிலையில், இன்று காலை 2வது டோஸ் தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியை சேர்ந்த நிவேதா, பஞ்சாப்பை சேர்ந்த நிஷா சர்மா ஆகிய செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.

 

 

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில்;- இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டேன்.தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கான வழிகளில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் ஒன்று பதிவிட்டுள்ளார்.