Asianet News TamilAsianet News Tamil

ஊரடங்கை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்...!! மோடி அதிரடி அறிவிப்பு...!!

கொரோனா பெரும் தொற்று நீண்டகாலம் நம்முடன் இருக்கும் நான்காவது முறையாக  ஊரடங்கு நீடிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் எனவும்  நான்காவது முறையாக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு மற்றவற்றில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார் 

pm modi speech to peoples on television
Author
Delhi, First Published May 12, 2020, 8:45 PM IST

கொரோனா பெரும் தொற்று நீண்டகாலம் நம்முடன் இருக்கும் நான்காவது முறையாக  ஊரடங்கு 18 தேதிக்கு பிறகு நடைமுறைக்கு வரும் என்றும்,  நீடிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் எனவும் ,   நான்காவது முறையாக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு மற்றவற்றில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்   இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி இவ்வாறு கூறியுள்ளார்.    ஒட்டுமொத்த உலகையும் உறைய வைத்துள்ள கொரோனாவால் சுமார் 180 க்கும் அதிகமான நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் அன்றாடம் ஏற்பட்டு வருகின்றன ,  இந்த வைரசைக் கட்டுப்படுத்த முறையான  தடுப்பூசி இல்லாததால் போதிய  சமூக இடைவெளியும்  ஊரடங்கும் தான் இந்த வைரசை கட்டுபடுத்த ஒரே வழி என மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்கியதை அடுத்து ,  இந்தியாவில் கடந்த மார்ச் -25 முதல் தேசிய ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார் .  முதற்கட்டமாக 21 நாட்கள் முழு அடைப்பை பின்பற்றினாலும்  கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராததை அடுத்து ,மீண்டும்  ஏப்ரல்  14ஆம் தேதி முதல் மே- 3ஆம் தேதி வரை ,  அதாவது 18 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து  மோடி உத்தரவிட்டார் ,  அதைத் தொடர்ந்து மூன்றாவது கட்டமாக மே-4 ஆம் தேதி முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .  

pm modi speech to peoples on television

மே-17 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில்,   மே-11ஆம் தேதி மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி விவாதித்தார் இந்நிலையில் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் , கொரோனா என்ற ஒரே ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சின்னாபின்னமாக்கி விட்டது , இதுவரை உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் இந்த வைரசால் உயிரிழந்திருப்பது  வேதனை அளிக்கிறது ,  இது போன்ற உலகளாவிய ஒரு பொது முடக்கம் என்பது உலக மக்கள் இதுவரை  கண்டதில்லை,  கொரோனா வைரசுடன் நாம் தன்னம்பிக்கையுடன் போராடவும் வேண்டும் அதேநேரத்தில் முன்னேறவும் வேண்டும் ,  இந்தியா கடந்த நான்கு மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறது ,  இந்தியா இந்த போராடத்தில்  உயிரிழப்பையும் தவிர்க்க வேண்டும் நாட்டின்   முன்னேற்றத்தையும் உறுதி செய்ய வேண்டும் ,  இந்தப் வைரஸ் மனிதர்களுக்கு நிறைய பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது .  கொரோனா வைரஸிலிருந்து உயிர்களை காப்பாற்ற உலகமே தற்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது ,  இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டி இருப்பதற்கு நாம் அனைவரும்தான் பொறுப்பேற்க வேண்டும் . 

pm modi speech to peoples on television

முன்பைவிட இன்னும் கூடுதலாக கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட நாம் தயாராக வேண்டும் ,  உலகம் முழுவதும் கொரோனாவால்  42 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் , ஆனாலும்  இந்திய மக்கள் கூடுதல்  உறுதியுடன் வைரஸ் தாக்குதலை சமாளிக்க வேண்டும் , வைரஸ்  பாதிப்புக்குப் பிந்தைய  உலகை இந்தியாதான் முன்னின்று நடத்த வேண்டும் , கொரோனா பெரும் தொற்று நீண்டகாலம் நம்முடன் இருக்கும் நான்காவது முறையாக  ஊரடங்கு நீடிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் எனவும்  நான்காவது முறையாக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு மற்றவற்றில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்  தற்போது உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது ,  இந்தியாவிற்கு முக்கியமான வாய்ப்புகளை இந்த சூழ்நிலை உருவாக்கி இருக்கிறது , என மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   வைரசுக்கு எதிரான போரில் இந்தியா முக்கிய கட்டத்தில் உள்ளது . இந்த வைரஸ் தாக்குதலுக்கு  முன்புவரை  இந்தியாவில் PPE உற்பத்தி கிடையாது ,  ஆனால் தற்போது நாளொன்றுக்கு இரண்டு லட்சம் வரை நாம் உற்பத்தி செய்கிறோம் , இப்படி  பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளி கொடுத்து வருகிறது .  உலகம் என்பது ஒரே குடும்பம்தான் அதில் இந்தியாவிற்கு எப்போதும் சுயநலம் கிடையாது ,  தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் மூலம் இந்தியாவின் வளர்ச்சி உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் . 

pm modi speech to peoples on television

இந்நிலையில் நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டு கொரோனாவுக்கு  எதிராக போராட வேண்டும் ,  இதற்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இது அல்ல.  நாம் இதற்கு முன் இது போன்ற பிரச்சினைகளை கேள்விப்பட்டதே இல்லை பார்த்ததே இல்லை அதேபோல் இந்தியா தற்சார்புடன் இருப்பது என்பதை சுய நலத்துடன் இருப்பதாக கூறமுடியாது ,  இந்தியாவுக்கு எப்போதுமே  சுயநலம் கிடையாது .  இந்தியாவின் மருந்தால் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏராளமான உயிர்கள்  காப்பாற்றப்பட்டுள்ளன என மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார் . 

Follow Us:
Download App:
  • android
  • ios