சங்க கால தமிழர்கள்.. தமிழ்நாட்டின் கலாச்சாரம்.! அசத்தலாக தமிழில் பேசிய பிரதமர் மோடி !

மகாத்மா காந்தியை பல ஆண்டுகளாக மறந்துவிட்ட நிலையை மாற்றினோம். காதி விற்பனையை பல மடங்கு 8 ஆண்டுகளில் அதிகரித்துள்ளோம் என்று கூறினார் பிரதமர் மோடி.

PM Modi speech 36th Convocation Ceremony of Gandhigram Rural Institute Dindigul

திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக  பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து தனி விமானம் மூலம்  மதுரை விமான நிலையத்துக்கு இன்று பிற்பகலில் வந்தடைந்தார்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு:

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.இதையடுத்து, பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக மழை காரணமாக அவர் சாலை மார்க்கமாக செல்வதாக இருந்தது.

PM Modi speech 36th Convocation Ceremony of Gandhigram Rural Institute Dindigul

இதையும் படிங்க..பிரதமர் மோடியை சந்திப்பது ஓபிஎஸ் டீமா? எடப்பாடி டீமா? எல்லாமே ரத்து.? வெளியான பரபரப்பு தகவல்

இந்நிலையில், தற்போது மழை இல்லாத காரணத்தினால் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் திண்டுக்கல் சென்றார். திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடி பேச்சு:

காந்தி கிராம பல்கலை விழாவில் பிரதமர் மோடி வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், காந்திய சிந்தனைகள் இன்றைக்கு பல சவால்களுக்கு பொருத்தமானதாக உள்ளது. மகாத்மா காந்தியை பல ஆண்டுகளாக மறந்துவிட்ட நிலையை மாற்றினோம். காதி விற்பனையை பல மடங்கு 8 ஆண்டுகளில் அதிகரித்துள்ளோம்.

கிராமப்புற சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகளை மத்திய அரசு மேம்படுத்தி உள்ளது.  கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாத அளவுக்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம். கிராமத்தின் ஆன்மா நகரத்தின் வசதி. இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க.பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் புத்தகம் என்ன ? அட.! இந்த நாவலா ?

PM Modi speech 36th Convocation Ceremony of Gandhigram Rural Institute Dindigul

இந்தியாவின் வளர்ச்சி:

கிராமங்களின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் உழைக்க வேண்டும். இயற்கை விவசாயம் நாட்டின் உர தேவையை குறைக்கும். சுதேச இயக்கத்தின் மையமாக இருந்தது தமிழ்நாடு. சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்த விழ்ப்புணர்வுடன் இருந்திருக்கின்றனர்.

பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போரிட்ட முதல் மகாராணி வேலு நாச்சியார் ஆவார். பெண் சக்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டின் மொழி, கலாசாரத்தைக் கொண்டாட காசி தயாராக இருக்கிறது. தேச ஒற்றுமையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் கையில்தான் இந்தியா உள்ளது என்று பேசினார் பிரதமர் மோடி.

இதையும் படிங்க..கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.. பிரதமருக்கு கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios