Asianet News TamilAsianet News Tamil

நாட்டின் சிறந்த தலைவர்.. 65.69 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு அமோக ஆதரவு.. தமிழகத்தில் ராகுல் கெத்து!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போலவே தென் மாநிலங்களான தமிழகமும் கேரளாவும் பிரதமர் மோடிக்கு எதிராக அதிகம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மோடியின் செயல்பாட்டுக்கு 32.15 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கேரளாவில் 32.89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

PM Modi's corona activities and opinion poll
Author
Delhi, First Published Jun 4, 2020, 8:04 AM IST

இந்தியாவில் மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களில் பிரதமர் மோடிக்கு 65.69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.PM Modi's corona activities and opinion poll
கொரோனா பாதிப்புள்ள காலத்தில் ‘ஸ்டேட் ஆஃப் தி நேஷன்’ என்ற பெயரில் ஐ.ஏ.என்.எஸ்-சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் கருத்து கணிப்பு நடத்தின. இந்தக் கருத்துக்கணிப்பில் நாடு முழுவதும் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்தக் கருத்துக்கணிப்பில் தேசிய அளவில் பிரதமர் மோடியின் செயல்பாட்டுக்கு 65.69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் 58.36 சதவீதம் பேர் அதிக திருப்தி அடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். 24.01 சதவீதம் பேர் திருப்தியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். 16.71 சவீதம் பேர் மோடியின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்தனர். ஒடிஷா பாஜக ஆளாத மாநிலம் ஆகும்.

PM Modi's corona activities and opinion poll
மிக அதிகபட்சமான ஒடிசாவில் பிரதமர் மோடியின் செயல்பாட்டுக்கு 95.6 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். வெறும் 2.2 சதவீதம் பேர் மட்டுமே  மோடி செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இமாச்சலப் பிரதேசம் (93.9%), சட்டீஸ்கர் (92.73%), ஆந்திரா (83.6%) ஆகிய மாநிலங்களிலும் மோடி செயல்பாட்டுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இந்த மாநிலங்களில் சட்டீஸ்கர், ஆந்திரா ஆகியவை பாஜக ஆளாத மாநிலங்கள் ஆகும். PM Modi's corona activities and opinion poll
 நாட்டிலேயே கொரோனா தொற்று அதிமுகள்ள மகாராஷ்டிராவில் மோடிக்கு 71 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் தேர்தலை எதிர்கொள்ள உள்ள பீகாரில் 58.48 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல அடுத்த ஆண்டு நடைபெற தேர்தலில் மேற்கு வங்களாத்தில் எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள பாஜகவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், பிரதமர் மோடிக்கு 60 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 PM Modi's corona activities and opinion poll
கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போலவே தென் மாநிலங்களான தமிழகமும் கேரளாவும் பிரதமர் மோடிக்கு எதிராக அதிகம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மோடியின் செயல்பாட்டுக்கு 32.15 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கேரளாவில் 32.89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக ஆட்சி செய்யும் கோவா மாநிலத்தில் குறைவாகவே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மூன்று மாநிலங்களிலும் பிரதமர் மோடியைவிட ராகுல் காந்திக்கு அதிக ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த பிரதமராக வருவதற்கு மோடிக்கு 66 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 23 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல்தான் பிரதமராக வர வேண்டும் என்பதில் தமிழகம் அவருக்கு கணிசமாக ஆதரவு அளித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios