எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியும் தமது டுவிட்டர் பக்கத்தில் எம்ஜிஆருக்கு தமிழில் புகழ் வணக்கம் செலுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார்.
அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம் என தமிழில் பதிவிட்டுள்ளார்.
