ஜெயலலிதா மறைவுக்கு மரியாதை செலுத்த வந்திருந்த பிரதமர் மோடி, சசிகலாவின் தலையில் தன் இடதுகையை வைத்து ஆறுதல் கூறி சில மாதங்களில் சிறைக்கு சென்றுவிட்டார். அதேபோல, விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை மட்டும் பிரதமர் மோடி இடது கையால் தோளில் தட்டிக்கொடுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக உருவெடுத்துள்ளது. 

சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள, பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்னை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் ஜெயலலிதாவை வரவேற்பது போல பிரதமர் மோடிய வரவேற்பதற்காக அமைச்சர்கள் அனைவரும் ஆஜராகினர். இந்த வரிசையில் புதிய நீதிக் கட்சி தலைவரும் இடம் பெற்றிருந்தார். விமானத்தை விட்டு இறங்கிய மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் மரியாதை செய்ததை அடுத்து, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தமிழ்மொழியின் பெருமையைப் பற்றி பேசியதற்கு தம்பிதுரை நன்றி தெரிவிக்க, மோடியின் முகத்தில் புன்னகை பூத்தது. வரிசையில் இருந்த அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் உட்பட பலரும் மோடியின் உரைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அமைச்சர்களிடம் விறுவிறுவென ரோஜாப்பூவை கையில் வாங்கிக்கொண்டு வேகமாக வந்த பிரதமர் மோடி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அருகே வந்த போது மட்டும், அவர் அளித்த ரோஜாவை வாங்கியதோடு தனது இடது கையால் விஜயபாஸ்கரின் தோளில் ஓங்கி தட்டிக்கொடுத்து சிரித்தார். இது தான் அரசியல் களத்தில் விவாத பொருளாக உருவெடுத்துள்ளது. 

மோடி ஒருவரை இடதுகையால் தட்டிக்கொடுக்கிறார் என்றால் அவருக்கு சிறை உறுதி என்று கூறப்படுகிறது. இதேபோல, ஜெயலலிதா மறைவுக்கு மரியாதை செலுத்த வந்திருந்த மோடி, சசிகலாவின் தலையில் தன் இடதுகையை வைத்து ஆறுதல் சொன்னார். அதன்பிறகு, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சிறைக்கு செல்லப்பட்டார். 

ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு நிலுவையில் இருந்து வருவதால் சிபிஐ அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ள உள்ள நிலையில் பிரதமர் மோடி விஜயபாஸ்கரை இடது கையால் தட்டிக்கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சென்டிமென்ட் அதிமுக அமைச்சர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.