Asianet News TamilAsianet News Tamil

PM Modi's New Car: பிரதமர் மோடியின் புதிய காரில் இவ்வளவு பெசிலிட்டியா.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

குஜராத் முதல்வராக இருந்த போது மோடி குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார். கடந்த 2014ம் ஆண்டு பிரதமரான பிறகு அதிக பாதுகாப்பான 'பி.எம்.டபிள்யு - 7 சீரிஸ், லேண்டு ரோவர் ரேஞ் ரோவர் வோக், டொயோட்டா லாண்ட் க்ருசர்' ஆகிய கார்களை பயன்படுத்தினார். 

PM Modi gets Rs. 12 crore Merc-Maybach S650 guard-armoured car..advance facility
Author
Delhi, First Published Dec 29, 2021, 12:20 PM IST

பிரதமர் மோடிக்கு அதிக பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்த மெர்சடிஸ் நிறுவனத்தின் ரூ.12 கோடி மதிப்பிலான மேபேக் எஸ் 650 கார் வாங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. 

குஜராத் முதல்வராக இருந்த போது மோடி குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார். கடந்த 2014ம் ஆண்டு பிரதமரான பிறகு அதிக பாதுகாப்பான 'பி.எம்.டபிள்யு - 7 சீரிஸ், லேண்டு ரோவர் ரேஞ் ரோவர் வோக், டொயோட்டா லாண்ட் க்ருசர்' ஆகிய கார்களை பயன்படுத்தினார். சமீபத்தில் டெல்லிக்கு வந்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்னை சந்திக்க புதிய மெர்சிடஸ் - மேபாக் எஸ் 650 கார்டு காரில் மோடி வந்தார்.

PM Modi gets Rs. 12 crore Merc-Maybach S650 guard-armoured car..advance facility

இந்த மெர்டசிஸ் மேபேக் எஸ் 650 வகை கார் 6 லிட்டர் இரட்டை டர்போ வி12 இன்ஜின் பொருத்தப்பட்டது. 516 பிஹெச்பி, உச்சபட்சமாக 900 என்எம் வேகத்திலும், அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்திலும் செல்லக்கூடியது. காரின் கதவுகள் அனைத்தும் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத ஸ்டீல் தகடுகளால் உருவாக்கப்பட்டவை. கண்ணாடியிலும் புல்லட் பாய்ந்தால் உடையாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

2 மீட்டர் தொலைவில் 15 கிலோ டிஎன்டி வெடிபொருள் வெடித்தாலும் காரில் இருப்பவர்களைப் பாதுகாக்கும் அம்சம் இந்த காரில் இருக்கிறது. காரில் உள்ள உள்ளரங்கு கதவு பாலிகார்பனேட் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. நேரடியாகத் தாக்கினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் காரின் அடிப்பாகம், கீழ்பாகம் அமைக்கப்பட்டுள்ளது. நச்சுவாயுத் தாக்குதல் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் காரின் கேபினில் ஏர்-சப்லே ஏரியா தரப்பட்டுள்ளது.

PM Modi gets Rs. 12 crore Merc-Maybach S650 guard-armoured car..advance facility

காரின் எரிபொருள் நிரப்பும் கலன் எந்தவிதமான தீ விபத்தும் ஏற்படாத வகையில் சிறப்பு ரசாயனக் கலவை பூசப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க்கில் ஏதேனும் துளை ஏற்பட்டாலோ அது தானாகே அடைந்துவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உலோகம் போயிங் விமானத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். தற்போது இந்த காரில் பயன்படுத்தப்படுகிறது.

PM Modi gets Rs. 12 crore Merc-Maybach S650 guard-armoured car..advance facility

காரின் டயர்கள் அதிநவீனமானவை, எந்தவிதமான சேதமும் டயருக்கு ஏற்பட்டாலும் உடனடியாக அதிலிருந்து தப்பிக்கும் வகையில் இருக்கும். காரில் கால் வைக்கும் பகுதி, சொகுசான உள்பகுதி, பின்பகுதி இருக்கையை மாற்றியமைத்தல் போன்றவற்றைச் செய்ய முடியும்.  இதுபோல 2 கார்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு காரின் விலை 12 கோடி ரூபாய். ஒரு காரில் பிரதமர் மோடி செல்லும்போது, மற்றொரு கார் அவருக்கு பாதுகாப்பாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios