Asianet News TamilAsianet News Tamil

ரெட்டை விரலைக் காட்டினார் மோடி... வெற்றிக் களிப்பில் முகமெல்லாம் புன்னகை! ஆனாலும் வருது நெருக்கடி!

PM Modi flashes victory sign as BJP takes unassailable lead in gujarat and himachal pradesh
PM Modi flashes victory sign as BJP takes unassailable lead in gujarat and himachal pradesh
Author
First Published Dec 18, 2017, 11:53 AM IST


குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்  பாஜக., வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இமாச்சலில் பாஜக., காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைப் பிடிக்கிறது. குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது. 

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி  நாடாளுமன்றத்துக்கு வந்தார்.  அவர், காரில் இருந்து இறங்கி வளாகத்தில் நடந்து வந்தபோது, ஊடகத்தினர் இருக்கும் பகுதியை நோக்கி, வெற்றி பெற்றதன் அடையாளமான வி எனக் காட்டும் வகையில் இரு விரலைக் காட்டி முகத்தில் புன்னகை மலர சிரித்துக் கொண்டே நாடாளுமன்ற வாயிலில் நுழைந்தார்.  

இருப்பினும், இன்று நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்  படுகிறது. குஜராத்தில் எதிர்பார்த்த வெற்றி கைநழுவிப் போனதற்கும், தாங்கள் பெரிய அளவி வெற்றி பெற இயலாமல் போனதற்கும் மோடி செய்த பிரசாரம்தான் காரணம் என்று காங்கிரஸ் யோசிக்கிறது. 

குறிப்பாக, குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாகவும், இதற்காக பாகிஸ்தான் உயரதிகாரிகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசியதாகவும் குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி காட்டமாக விமர்சித்தார்.  பிரதமர் மோடியின் இந்தக் கருத்து தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று குரல் எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட்ட அனைத்து கட்சிகளும் முடிவு செய்துள்ளன.  எனவே குஜராத் தேர்தல் வெற்றியைக் கொண்டாட முடியாத வகையில் மோடிக்கு அனைத்துக் கட்சிகளும் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்  படுகிறது. 

 #GujaratVerdict, #HimachalPradeshElections

Follow Us:
Download App:
  • android
  • ios