தமிழக காங்கிரஸின் மாநில தலைவரான கே.எஸ்.அழகிரியை ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்! என்று அவரது கட்சியினரே அடையாளமிடுவது வழக்கம். அதை மெய்ப்பிக்கும் விதத்தில்தான் அவரது செய்கைகளும் இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன், அறிவிக்கும் முன்பாக அவர் சிதம்பரத்தின் கவனத்துக்கு அதை கொண்டு போய், அனுமதி பெறுகிறார் என்றெல்லாம் தமிழக காங்கிரஸினுள் தகவல்கள் தடதடக்கின்றன. '

மோடிக்கு தமிழக அரசியல்வாதிகளில் பலரை பிடிக்கவே பிடிக்காது. அவர்களில் முதன்மையானவர் ப.சிதம்பரம். இரண்டு பேருக்கும் கடந்த ஐந்து வருடங்களாக நடந்து வரும் கருத்து யுத்தமே இதற்கு சாட்சி. சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீதான சி.பி.ஐ. பாய்ச்சலும், சிதம்பரத்தை கைது செய்திட நடந்த மூவ்களுமே கூட டெல்லி லாபியின் கில்லி முடிவுகள் என்றுதான் விமர்சிக்கப்படுவது வழக்கம். அந்தளவுக்கு மோடிக்கு ப.சி.யை கண்டால் ஆகாது. தன் தலைவருக்கு ஆகாது என்பதாலோ என்னவோ கே.எஸ்.அழகிரிக்கும் மோடி மீது அப்படியொரு ஆத்திரம், ஆதங்கம். 

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் “காங்கிரஸ் கட்சியின் தலைவர் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை மூவாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து மோடி நிருவியுள்ளார். இதற்கு பதிலாக மாநிலங்களில் முப்பது மருத்துவக் கல்லூரிகளைக் கட்டி, அதற்கு படேல் பெயரை வைத்திருந்தால் மக்கள் மகிழ்ச்சியடைந்திருப்பர். மக்கள் ‘மோடியே திரும்பிப் போ’ என்று வாயால் மட்டும் சொல்லாமல், ஓட்டு சீட்டுக்களாலும் சொல்லியுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

 

இதை விமர்சிக்கும் அரசியல் பார்வையாளர்கள் “அழகிரி தன்னோட கட்சி தலைவர் படேலுக்கு சிலை வைத்ததையே வேஸ்ட் எனும் ரேஞ்சுக்கு பேசியிருப்பது ஆச்சரியத்தை தருது. ஆரோக்கிய அரசியல்தான் இது. ஆனால், பல லட்சக்கணக்கான மக்கள் ஓட்டுச் சீட்டுக்கள் வழியா பி.ஜே.பி.க்கு எதிரான வாக்குகளைப் போட்டு என்னமோ மோடியை பிரதமர் பதவியிலிருந்து தூக்கி விசி அப்புறப்படுத்திட்டா மாதிரி, ‘மோடியே திரும்பிப்போன்னு விரட்டிட்டாங்க.’ அப்படின்னு அழகிரி பேசியிருக்கிறது ஆச்சரியத்தை அல்ல, சிரிப்பை உண்டாக்குது.

சிதம்பரத்துக்கு ஆகலைங்கிறதுக்காக, நாட்டுல இன்னமும் பாதி இடங்களில் தேர்தலே முடியாத நிலையில், மோடியை விரட்டியாச்சு! அப்பாடா!ன்னு அழகிரி ஆனந்தப்படுறது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்குது.” என்கிறார்கள். ஏன் சார் ஏன்?