Asianet News TamilAsianet News Tamil

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முதல் முறையாக போப் ஆண்டவரை சந்திக்கிறார்.!

இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பை ஏற்று இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 

PM modi arrives in rome to attend G20 Summit
Author
Italy, First Published Oct 29, 2021, 11:42 AM IST

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்றடைந்தார்.

இத்தாலியின் ரோம் நகரில் அக்டோபர் 30 மற்றும் 31-ம் தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பை ஏற்று இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 

PM modi arrives in rome to attend G20 Summit

இத்தாலி தலைமையின் கீழ் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு,  பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.  இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்துள்ளார்.

இதையும் படிங்க;- #BREAKING சசிகலாவுக்கு ஆதரவு.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகி.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!

இந்த மாநாடு நிகழ்ச்சிகளின் போது இத்தாலி பிரதமர் மரியா டிரோகி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இத்தாலி பயணம் குறித்து அந்நாட்டுக்கான இந்திய தூதர் கூறுகையில்;- ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள், வர்த்தகத்துறை அமைச்சர்கள் ஏற்கனவே சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இத்தாலி- இந்தியா இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு 36% அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காலத்திலும் இந்தியாவில் இத்தாலி நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் தற்போது 700 இத்தாலி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன இத்தாலியில் 100க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றார்.

இதையும் படிங்க;- ஆடிட்டர் குருமூர்த்தி மீதான புகார்.. ஆறப்போட்ட அதிமுக.. அதிரடி காட்டிய திமுக..!

PM modi arrives in rome to attend G20 Summit

மேலும் வாடிகனுக்கு சென்று போப் பிரான்சிசை சந்திக்கவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். போப் பிரான்சிசுடனான சந்திப்பு 30 நிமிடம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிகனில் போப் பிரான்சிசை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

PM modi arrives in rome to attend G20 Summit

இதையும் படிங்க;- அதிமுகவில் சசிகலா? ஓபிஎஸ் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. ஆதரவு கரம் நீட்டும் செல்லூர் ராஜூ..!

இதனையடுத்து, பருவ நிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ செல்கிறார். கிளாஸ்கோவில் நடைபெறும் 26-வது கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாடு நவம்பர் 1, 2 ஆகிய நாட்கள் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பருவநிலை மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios