Asianet News TamilAsianet News Tamil

#Unmaskingchina சீன எல்லையில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றிய பிரதமர் மோடி..!

லடாக்கில் இந்திய வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி திருக்குறள் ஒன்றை சுட்டிக்காட்டிப்பேசியது தமிழர்களின் வீரத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. 

PM Modi announces the bravery of Tamils on the Chinese border
Author
China, First Published Jul 3, 2020, 5:01 PM IST

லடாக்கில் இந்திய வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி திருக்குறள் ஒன்றை சுட்டிக்காட்டிப்பேசியது தமிழர்களின் வீரத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. 

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மற்றும் சீன துருப்புகள் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், லடாக் பகுதியில் இன்று காலை சென்ற பிரதமர் மோடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். முப்படைகளின் தளபதி பிபின் ராவத்துடன் அப்பகுதிக்குச் சென்ற மோடி அங்கு ஆய்வு செய்தார்.PM Modi announces the bravery of Tamils on the Chinese border

 கல்வான் பகுதியில் சீன வீரர்களுடன் மோதலில் காயமடைந்த வீரர்களை பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், லடாக்கில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ராணுவத்தினரிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது.

நாம் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர்கள் தான். ஆனால்வெளியில் சுதர்சன சக்கரத்தையும் வைத்திருக்கிறோம். நாட்டின் நிலப்பரப்பை அதிகரிக்க பேராசையுடன் செயல்பட்டு எப்போதும் வீழ்ச்சிதான் அடைந்துள்ளனர் எனக் கூறினார்.PM Modi announces the bravery of Tamils on the Chinese border

லடாக்கில் இந்திய வீரர்கள் இடையே உரையாற்றிய மோடி திருக்குறள் ஒன்றை சுட்டிக்காட்டினார். படைமாட்சி என்கிற அதிகாரத்தில் உள்ள ’மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு’ என்கிற திருக்குறளை குறிப்பிட்ட அவர் படைவீரர்களின் பண்புகள் குறித்து விவரித்தார். படைவீரர்கள் பற்றி திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இங்கு குறிப்பிட விரும்புகிறேன், மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கு ஏமம் படைக்கு’எனது வீரம் மான உணர்வு முன்னோர் சென்ற வழியில் நடத்தல் தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படை படை வீரர்களுக்கான பண்புகள் என திருக்குறளில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார். PM Modi announces the bravery of Tamils on the Chinese border

அவ்வப்போது தமிழில் பேசுவதை கடமையாகக் கொண்டுள்ள பிர்தமர் மோடி, முக்கியமான சீன - இந்திய இடையேயான போருக்கு மத்தியில் நம் நாட்டு ராணுவ வீரர்களிடம் தமிழில் பேசியிடுப்பது பெருமைப்பட வைக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios